உங்கள் நண்பன் திலீபன்

உங்கள் நண்பன் திலீபன்
விதியை நம்பி மதியை இழக்காதே.

Monday, November 29, 2010

தலைவா உன்னாலே தலைநிமிர்ந்தோம்


இதுவரை உலகம் காணாத தலைவரே எமது தமிழ் மக்களுக்கு கிடைத்த தலைவர், வேறு எந்த இனத்திற்கும் கிடைக்கா பொக்கிஷம். யார் யாரோ எல்லாம் தன்னைத் தானே தலைவன் என்று சொன்ன போது. உலகே வியந்து பார்க்கும் எம் தலைவர் சொன்ன ஒரு வாக்கியம், என்னை ஒரு பொழுதும் தலைவனாக நான் நினைத்ததில்லை, என் இனத்திற்கு என்னால் முடிந்த எனது கடமையை செய்கிறேன் என்று சொன்னவர், தன்னை எப்பொழுதும் ஒரு போராளியாகவே அறிமுகப் படுத்துபவர்.

எமது மக்கள் படும் துன்பம் தாங்காமல் விளையாடும் வயதிலே களமாடப் புறப்பட்டவர், களமாடப் புறப்படும் முதல் விளையாட்டுக்கு கூட ஒரு நண்பனையும் தள்ளி விடாதவர்;. மலரினும் மெல்லிய மனம் படைத்தவர், சாதுவாய் இருந்தவர் மிரண்டார் சுருண்டது கொடிய சிங்களம். போராடப் புறப்படும் கணமே தீர்க்க தரிசனமான முடிவை எடுத்தார்; எம் தலைவர்;, எவரையும் நம்பிப் பயன் இல்லை. தன் கையே தனக்குதவி என்று. தன் கையில் இருந்த மோதிரத்தை விற்றும் சிறுக சிறுக உண்டியலில் பணம் சேர்த்தும் வாங்கினார்; முதல் ஆயுதம்.

எமது எதிரியை விட துரோகியே முகவும் கொடியவன் என அன்றே முடிவெடுத்த தலைவர், முதல் முதல் களை எடுத்தது எமது இனத் துரோகியை. அன்றில் இருந்து சிறுக சிறுக தன்னோடு நண்பர்களையும் சேர்த்து சிங்களத்திற்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினார். பாதியில் வந்தவர்கள் பலர் பாதியிலே போக தான் கொண்ட லட்சியத்தில் உறுதியாய் நின்றவர். தமிழீழ விடுதலைப் புலிகள் என் தனது அமைப்பிற்கு பெயர் சூட்டினார். அமைப்பில் இருப்பவர்கள் ஒழுக்கமானவர்களாக இருக்க தமது அமைப்புக்கென ஒழுக்க விதிகளையும் விதித்தார். தனது வாழ்வில் தான் ஒழுக்க சீலரகவே வாழ்கின்றார்.

எமது இன விடுதலைக்காக போராட வரும் போராளிகள் உருதியானவர்களாக இருக்க பயிற்சி கொடுத்து. அவர்களின் நெஞ்சில் விடுதலை வேட்கையை மேலும் மெருகூட்டினார். தாய்த் தமிழுக்காய் எக்கணமும் களப் பலியாக துணிந்த போராளிகளை உருவாக்கினார், களமாடத் துணிந்த ஒவ்வொரு நெஞ்சங்களின் கழுத்திலும் நஞ்சை அணிவித்து தானும் அணிந்துகொண்டார். விடுதலை அமைப்பின் ரகசியங்களைக் காக்கவும் கொடிய சிங்களத்தின் கொடிய சித்திரவதைகளில் இருந்து தம்மைக் காகவே நஞ்சை அணிந்தனர்.

பல வல்லாதிக்க சக்திகள் எமது போராட்டத்தை மழுங்கடிக்க நினைத்த போதும், எமது போராட்டப் பாதையை மற்ற எத்தனித்த போதும், தமிழ் மக்களின் விடிவுக்கான விடுதலைப் போரை விட வேறு எந்த வழியும் மக்களுக்கு விடிவைத் தராது என அன்றே தரிசனமான முடிவை எடுத்தார் தலைவர். வல்லாதிக்க சக்திகள் பல அழுத்தங்களைக் கொடுத்த போதும் , பல இடையூறுகளை விளைவித்த போதும் வளைந்து கொடுக்காமல் துணிந்து நின்றவர் எம் தலைவர். இதை பொறுக்காத அணிய சக்திகள் போராளி அமைப்புக்களை தூண்டிவிட்டு பிளவுகளை ஏற்ட்ப்படுத்தியது அப்போதும் கலங்காமல் களமாடினர் எம் தலைவர்.

எமது இரண்டாயிரம் விடுதலைப் புலிகளை அழிக்க இரண்டு இலட்சம் ராணுவத்தை அனுப்பியது இந்தியா. இரண்டு இலட்சம் ராணுவம் இரண்டு வருடங்கள் களமாடி தமது இரண்டாயிரம் ராணுவத்தை இழந்தபோதும் எதவும் முடியாமல் புறமுதுகிட்டு ஓடியது இந்திய ராணுவம்.

எமக்கென தனியான அரசாங்கத்தை அமைத்தார் எம் தலைவர். எமது தமிழ் ஈழத்தின் வளங்களை வளர்க்க
விவசாய திணைக்களம்,
எமது மக்களின் வாழ்வை முன்நெடுக்க தமிழீழ வைப்பகம்,
மக்களுக்கான கைத்தொழில் உதவி,
சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட தமிழீழ காவல்த் துறை,
தமிழீழ நீதி மன்றம் தமிழீழ சட்டக் கல்லூரி,
போக்கு வரத்து திணைக்களம்,
வனவளத்துறை,
கால் நடை வளர்ப்பு,
மீன் வளத் துறை,
ஆனையிறவு உப்பளம் என அனைத்து வழிகளிலும் ஈழத்தின் செல்வங்களை மக்களுக்கு பயன் உள்ளதாக மாற்றி ஈழத்தை வளர வைத்தார்.
காந்தரூபன் அறிவுச்சோலை,
செஞ்சோலை சிறுவர் இல்லம்,
முதியவர் காப்பகம்,
அமைத்து எம் பிஞ்சுகளையும், முதிர்ந்த எமது தாய் தந்தையரையும் கண்ணுக்குள் வைத்துப் பார்த்தார்.

எமது தலைவர் சக போராளிகளை அண்ணனாகவும் தம்பி யாகவும் தங்கையாகவும், பிள்ளைகளாகவும் பார்த்தார். ஒவ்வொருவரை தனது தாய் தந்தை பிள்ளைகளாகப் பார்த்தார், அவர்களின் விடுதலைக்காய் தனது தாய் தந்தையை பிரிந்து பல ஆண்டுகள் வாழ்ந்தார். உறங்கும் நேரம் கூட கண்களை மூடிக்கொண்டு விடுதலையை மட்டுமே சிந்தித்தார்.

உலகே எம்மை ஏமாற்றி வார்த்தைகளில் மாத்திரம் மனித உரிமை. சிறுவர் பாதுகாப்பு பேசிக்கொண்டு, சிங்களத்தின் கொடிய யுத்ததிற்கு துணை போனது. எமது மக்களை சிங்களத்தோடு சேர்ந்து கொன்றொழித்தது. மக்களைக் காக்க வேறு வழி இன்றி புலியாய்ப் பாய்ந்த எமது தலைமை பதுங்கியது. பயங்கர வாதத்திற்கு எதிரான போர் என கொட்டம் அடித்து எமது மக்களைக் கொண்றொளித்த சிங்களம் எஞ்சி இருந்த மக்களைக் கொள்ள முடியாமல் தவித்தது, சரணடைய போகின்றோம் என சர்வதேசத்திடம் சொல்லிச் சென்றவர்களை ஏமாற்றி சமாதான பறவைகளைக் கொன்றது. மக்களைக் காக்க வேறு வழி இன்றி ரத்தம் கொதித்த போதும் மௌனம் காத்தது எமது தலைமை.

மௌனம் காக்கும் தலைமை உறங்கவில்லை. மௌனித்த துப்பாக்கிகள் மரணிக்கவில்லை, எமது தலைமையின் வழிகாட்டலுக்கு இன்றும் காத்திருக்கிறது எமது படை. விடுதலை பெரும் நாள் வரும். சாதாரன பிறப்புக்களே அழியும் எமது தலைவர் ஓர் அவதாரம் அவதாரங்கள் அழிவதில்லை. புலம் பெயர் தமிழர்களே புறப்படுங்கள் எமது தேசியத் தலைவரின் கீழ் மீண்டும் புத்துயிருடன் போராடத் தயாராகுங்கள்.

Saturday, November 27, 2010


தம்பி நீ...

நேதாஜி தீட்டிய வீரம்...

மண்டேலா தியாகத்தின் தீரம்...

மாவோ நிகழ்த்திய புரட்சி...

எடிசன் செய்த ஆராய்ச்சி..

சேகுவேரா புரிந்த போர்...

சாக்ரடீஸ் பொழிந்த தத்துவம்..

புக்க்லேயின் முதல் துப்பாக்கி...

காஸ்ட்ரோ நடத்தும் ஆட்சி...

மார்ட்டின் லூதர் கண்ட கனவு...

பகத்சிங் காட்டிய கலகம்...

நெருதாவின் விடுதலைக்கவிதை...

பாப் மார்லே பாடிய பாடல்...

பெரியார் சொன்ன சமூக நீதி..



எங்கள் குலசூரியனே...பிரபாகரா...

நீ வாழ... என் ஆயுள் குறைய கடவது....

Friday, November 26, 2010


மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே! தத்தித் தவழ்ந்து தரணியெல்லாம் வலம் வந்த காலத்தில் தாயவள் கண்ட கனவுகள் எத்தனை! உங்கள் தாயவள் கண்ட கனவுகள் எத்தனை! பட்டு வேட்டிகட்டி பாவாடை தாவணி போட்டு பவனியெல்லாம் வலம் வரும் இந்தப் பருவ காலத்திலே மணமகன் மணமகளாகி மாலைகள் பல சூடி பிள்ளைச் செல்வங்கள் பலபெற்று பேரும் புகழோடும் - வாழ்வீர்கள் என்று. பெற்றார் உற்றார் உறவினர்கள் காத்திருந்த வேளையில் தனிப் பெருமை எமக்கு வேண்டாம் தங்கத் தலைவன் - தானையிலே தமிழ் தாயகத்தின் இறமைகாக்க தனித் தமிழீழம் மீட்க! எடுத்தீர்களே அன்று கைகளில் ஆயுதம் எடுத்தீர்களே அன்று கைகளில் ஆயுதம் வீரர்கள் நீங்களைய்யா! மாவீரர்கள் நீங்களைய்யா! வெற்றிகள் பல தந்து வீறுகொண்டு எழுந்ததெல்லாம் வீணாகப் போகவில்லை எம் செல்வங்களே வீணாகப் - போகவில்லை. வீறுகொண்டு எழுந்துள்ளோம் - நாங்கள் விடியலைத் தேடி வீறுகொண்டு எழுந்துள்ளோம். இனியும் நாம் பொறுத்திருந்தால்! நாம் இனியும் பொறுத்திருந்தால் தமிழர்கள் நாங்கள் என்றும் தமிழ் எங்கள் தாய் - மொழியென்றும் சொல்ல தகுதி அற்றவர்கள் ஆகிவிடுவோம் நாங்கள் தகுதியற்றவர்கள் - ஆகிவிடுவோம். பொறுத்தார் அரசாள்வார் என்றார்கள் முன்னோர்கள்! பொறுத்தேன் பொறுத்தேன் உங்கள் பெருமைகூற கையில் - பேனா எடுக்க பேதைகள் நாங்களைய்யா! வெறும் கோழைகள் ஆகிவிட்டோம் பேதைகள் நாங்களைய்யா! வெறும் கோழைகள் ஆகிவிட்டோம். தாமதித்து விட்டோம் நாங்கள் தாமதித்து விட்டோமைய்யா! எம்மை தடைசெய்த நேரத்தில் தாமதித்து விட்டோம். தம் இனம் காக்க தனித் தமிழீழம் மீட்க தன் சொந்தமண்ணில் போரிடுதல் தவறென்று தடை செய்தார்களே எம்மை எம் உறவுகள் உங்களை - பயங்கரவாதிகளென்று! தாமதித்து விட்டோமைய்யா தாமதித்துவிட்டோம் நாங்கள்! தட்டி இது தவறென்று சொல்வேண்டிய நேரத்தில - தாமதித்துவிட்டோம். இனியும் பொறுப்போமா! நாம் இனியும் பொறுப்போமா! பொங்கி எழுந்துவிட்டோமைய்யா நாங்கள் பொங்கியெழுந்து விட்டோம்! ஊங்கள் கனவுகள் நினைவாகும் நேரமிது அதை நாம் ஓவ்வொரு வரும் உறுதியுடன் கூறவேண்டிய நேரமிது! போரிட்டு வெல்லமுடியாத உங்களை எரிகுண்டு கொண்டு சூறைபிடித்து பல சித்திரைவதைகள் செய்து அழித்தானே!- மகிந்தா. இதுதான் போரின் வெற்றியாம். இதுதான் கயவர் போரின் வெற்றியாம். முற்பத்துமூன்று நாடுகளுடன் சேர்ந்து முடவனவன் செய்த சூழ்ச்சிப்போரில் வீறுகொண்ட - புலிகளாய். போரிட்டு வெல்வோமென்று பொங்கி எழுந்து- பல புலமைகள் தந்ததெல்லாம புலத்தில் நாம் வாழ்ந்தாலும் உடனுக்குடன் அறிந்தோமைய்யா. புன்னகை பூத்துனின்ற எம்முகம்இ புத்துணர்வு பெறுமுன்னே எரிகுண்டுகளையும் நச்சு வாயுகளையும் வீசி! கயவனவன் எங்கள் கனவுகள் கற்பனைகள் உங்களின் கதை முடித்தானோ!! முறக்க முடியுமாஇ மகிந்த ஆட்சியை - இல்லை மன்னிக்கத்தான் முடியுமா? மண்டை ஓடுகள்தான் அவனிற்கு மாலையாக போகின்றது. கொடுங்கோலன் ஆட்சியில் இப்படியொரு கொடுமைநடக்குமென்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை! நமக்கு நல்லதெல்லாம் செய்வேனென்று கூறி நாற்காலியில் ஏறி அமர்ந்து கொண்டான்! நாசமாகப் போகின்றான்இ அவன் நாசமாகப் போகின்றான்! கொட்டும் மழையினிலும் கடும் குளிர் பனித் தூறலிலும் கேட்ட நின்றதெல்லாம் எமக்கொரு உரிமைதானே! பெற்றுத் தருவோமென்றுதானே பேச்சுவார்த்தைகளுக்கு - இழுத்தார்கள். சொந்த இனத்தின் விடியலிற்காய் சொந்த மண்ணிற்காய் - போரிடுதல் பயங்கரவாதம் என்றார்களே! பெற்ற இந்தப் பெயர் நீக்க பெரும்பாடு பட்டீர்களே பேணி வந்ததெல்லாம் வீணாகப் போனதென்ன! பேணி வந்ததெல்லாம் வீணாகப் போனதென்ன! வெற்;றியின் விளிம்பில் நின்றவர்கள் நீங்களய்யா! வெற்றியின் விளிம்பில் நின்றவர்கள் நீய்களய்யா! வீணாய் போனவர்களின் பேச்சுவார்த்தையின் சூழ்ச்சியினால் - கிடைத்ததிந்த பேரிழப்பு இனியும் நாம் பொறுக்கமாட்டோம்! இனியும் நாம் பொறுக்கமாட்டோம்! பொங்கி எழுந்திடுவோம் தனித் தமிழீழம் மீட்போம் சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட தனி - தமிழீழம் மீட்போம். புலிகளின் தாகம் புலம்பெயர் தமிழ்மக்களின் தாகம் தமிழீழத் தாயகம்தமிழீழத் தாயகம்!

தீலீபன் ராஜா
99940 18068

Saturday, October 23, 2010

தமிழே நீ வாழ்க!!



தமிழே நீ வாழ்க!!

அறத்துடன் மறம் கலந்து

அண்டமே திண்டாட ஆட்சி செய்த

அன்புத்தமிழே,அறத்தமிழே,என்தாயே

மறம் காத்த மண்ணிலே

திறம் காத்த உன்னோர்கள்

மதிமயங்கி எங்கேனும்

மடிந்து போனாலும்

என் கண்கள் தூங்காது

உனைப் பாடத் தயங்காது

விண்வெளியில் உன் பெயரில்

வீடமைக்க வேண்டும்-அதில்

என் தமிழை உலகமெலாம்

என்நாவால் பரப்பிடுவேன்

உன் பிள்ளை உனக்காக

பா உரைக்க வேண்டும்

கண்பார்க்கும் தூரமெல்லாம்

நீ நீயாக வேண்டும்

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என

தமிழையே தாய்மொழியாக

புலத்துத் தமிழரெல்லாம்

பேச்சில் பரப்ப வேண்டும்

மறத்தமிழ் என்றுமே மறையாது

எம் வீரம் என்றுமே மண்ணிலே

அழியாது

வாழ்கதமிழ்,வளர்க தமிழ்மொழி.

காசி ஆனந்தன் நறுக்குகள்.



இலக்கியம்

"களத்தில் நிற்கிறேன்
என் இலக்கியத்தில் அழகில்லை என்கிறாய்!
தோரணம் கட்டும் தொழிலோ எனக்கு?

வாளில்-
அழகு தேடாதே..
கூர்மை பார்:

புத்துயிர்

"போராளிகள் செத்து கொண்டிருக்கும் மண்
என்கிறார்கள்.
என் மண்ணை.
திருத்தினேன்-
போராளிகள் பிறந்து கொண்டிருக்கும்
மண்

உடைப்பு

"சொல்கிறார்கள்
கிளியின் கூண்டை திறந்து விடு:
முரண் படுகிறேன்.
உடைத்து விடு:

உலக அமைதி

மனித நேயம் பேசின அணுகுண்டுகள்
புறாக்களை பறக்க விட்டன கழுகுகள்
போராடிக் கொண்டிருக்கிறது அமைதி"

அரண்

என் வலக்கையின் ஐந்து விரல்கள்
உண்ணவும் எழுதவும்
வணங்கவும் மட்டுமல்ல
அறையவும்...

நாற்காலி

இங்கே வேறுபாடு அதிகம் இல்லை.
நாற்காலிக்கும் கட்டிலுக்கும்
வீடு தூங்க கட்டில்.
நாடு தூங்க நாற்காலி...

தமிழன்




தமிழன் என்றொரு இனம் உண்டு,
தனியே அவர்க்கொரு குணம் உண்டு.
அமிர்தம் அவனது மொழியாகும்
அன்பே அவனது வழியாகும்.
கலைகள் யாவினும் வல்லவனாம்,
கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்.
நிலைகொள் பற்பல அடையாளம்,
நிந்தனை இன்னும் உடையோனாம்.
மானம் பெரிதென உயிர் விடுவான்,
மற்றவர்க்காக துயர் படுவான்.
தானம் வாங்கிடக் கூசிடுவான்,
தருவது மேல் எனப் பேசிடுவான்.
சாதிகள் தொழிலால் உண்டெனினும்,
சமரசம் நாட்டினில் கண்டவனாம்.
நீதியும் உரிமையும் அன்னியர்க்கும்
நிறை குறையாமல் பண்ணினவன்.
மானம் பெரிதென உயிர் விடுவான்

தேசத்திற்கு இது நல்ல இலக்கு!!!



தேசமே இது நல்ல இலக்கு
திரும்பவும் திரும்பவும் பெண்மையை குதறு.
யுத்த காலத்தில் உண்மைதான்,
முதலில் காயப்படுவதெனினும்,
முற்றிலும் காயப்படுவதும் பெண்மை..

பட்டியலிட்டு காட்டுவது வீண்
பின்னும் பெயர் வரிசைகள் நீள்கையில்
பெண்ணின் இடம் எதுவென தேடினால்
மேலும் மேலும் மலகுழிகளே நாறும்,
பெண்ணாளும் தேசமிதில்
பெண்களை வேட்டைநாய்கள் குதறும்.
பிய்ந்து போன பால் முலையாள்
தன் பிஞ்சை தேடி கதறி அழுகிறாள்
பிறகும் பிய்க்கிறார், குதறுகிறார்,
பேயென கூடித்தின்கின்றார்
கடப்பாரை குறிகளால்
பிளந்தது போதாதென்று
பெண்ணின் பிறப்புறுப்பில்
வெடிகுண்டை சொருகுகிறார்
பீரங்கி கொண்டொரு தேசத்தின் ஆன்மாவை பிளந்தது போலிது இல்லையா?

பெண்ணாளும் தேசமே
பால் முலைகளை பிய்தது குதறத்தான்
வேட்டை நாய்களை பயிற்றுவியா ?
மனுக்குல நாகரிகத்தை ஈன்ற வாசலை நோக்கித்தான் உன் பீரங்கி குறி வைக்குமா?
தேசமே இது நல்ல நோக்கு..
பிஞ்சென்றாலும் தாய் என்றாலும்
பெண் குறியை வேட்டை பொருளாக்கு..
பெண்மை வாழ்கவென்று பாடு.
பெண்ணாய் பிறந்தவள் மீதே உன் நாய்களை ஏவு..
பெண்மை வெல்கவென்று கை கொட்டியாடு ..
பிறகும் பிறகும் அதையே பிய்த்து குதறு..
தேசத்திற்கு இது நல்ல இலக்கு
அதுவும் பெண்ணாளும் தேசத்திற்கு ...



இந்த கவிதை சந்திரிக்கா ஆட்சியின் பொது எழுத பட்டது சோனியா ஆட்சிக்கும் பொருந்துகின்றது வெட்கப்பட வேண்டிய விஷயம்...

சுதந்திர இந்தியா


சுதந்திர இந்தியா
அடிமைத் தளை
நம்மை ஒன்றாக கட்டி வைத்தது
சுதந்திரம் நம்மை
கட்டவிழ்த்து வேறுவேறாக பிரித்துவிட்டது

அன்று வெள்ளையனை வெளியேற்ற‌
நாம் ஒன்றினைந்திருந்தோம்
இன்று நாமே தனித்தனி
தீவுகள் ஆகிவிட்டோம்

வெள்ளையனை வெளியேற்ற
போராடிய நாமே இன்று
வெள்ளைக்காரர்கள் ஆகிவிட்டோம்

அடிமை என்ற தளையை
அகற்றிய நாமே
ஜாதி மதம் என்ற‌
விலங்கினை நமக்கு நாமே
பூட்டிக் கொண்டோம்

கிளிந்து கிட‌ந்த‌ இந்தியாவை
ஒன்றாக‌ தைத்த‌வ‌ன்
வெள்ளைக்கார‌ன்
அதை சுத‌ந்திர‌ம் என்ற‌
க‌த்த‌ரிக்கோலால் ம‌றுப‌டியும்
துண்டுக‌ளாக்கிய‌வ‌ன்
இந்திய‌ன்

ஏய் இந்தியாவே உன்னிடம் ஓன்று கேட்கிறேன் ?????



இந்தியாவை நான் பெரிதும் நேசிக்கிறேன் --
தமிழ்நாடு என்ன வெளி நாட்டிலா இருக்கிறது ?
இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள் --
அப்படி என்றால் தமிழர்கள் யாருடன் பிறந்தவர்கள்?
தமிழர்களை காப்பற்ற மறந்த இந்தியாவே ...........
இன்று முதல் உனது சுதந்திரம் ஓர் கருப்பு நாளாக கொண்டாடுவேன்
இதுவரை வெள்ளை ஆடையுடன் கொண்டாடிய நான்
இன்று முதல் தமிழ் ஈழம் கிடைக்கும் வரை
கருப்பு ஆடையுடன் கருப்பு தினமாக கொண்டாடுவேன்
ஒரு தமிழனாக உறுதி மொழி எடுத்து கொள்கிறேன்
ஜெய்கிந்

Saturday, October 2, 2010

காந்தி என்ற “துரோகி” – “மகாத்மாவானது” எப்படி? ஏன்?


காந்தி என்ற ஒரு தனி மனிதன் எப்படி இந்தியாவின் அடையாளமாக ஆக்கப்பட்டார்? இந்திய விடுதலை போராட்டத்தில் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்த பல்லாயிரக்கணக்கான போராளிகளை(மக்களை) விட காந்தி எந்த விதத்தில் உயர்வானவர்? என்ற கேள்விகள் எல்லாம் என்னுள் பல முறை எழுந்துள்ளன. கேள்விக்களுக்கான பதிலை தேடும் முயற்சியில் விளைந்ததே இக்கட்டுரை.”துரோகி” காந்தி, “மகாத்மா காந்தியானது எப்படி? என்ற கேள்விக்கான பதிலை இலவச இணைப்பாக கிடைத்து.


ஏகாதிபத்திய அரசுகள் எல்லாம் தங்கள் கருத்தியலுக்கு(ideology) ஒத்துவரக்கூடிய ஒரு மனிதனை அந்த நாட்டின் அடையாளமாக மாற்றியும், அவர்களின் தேவை முடிகின்ற பொழுது அவர்களின் உண்மை முகங்களை அம்பலப்படுத்தியும் வந்துள்ளது வரலாறு முழுவதும் பதிவாகியுள்ள உண்மை. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் கருத்தியலுடன் ஒத்துபோவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு அடிமையாகவும் இருந்துள்ளார் காந்தி. இதன் காரணமாக காந்தி ஆங்கிலேயர்களால் ஒரு பெரும் சக்தி என்று வர்ணிக்கப்பட்டார். இந்தியாவின் அடையாளமாவதற்கு இது மட்டும் போதுமா என்றால் போதாது என்பதே பதிலாக இருக்கும். அன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் ஆதிக்கம் செய்து வந்த‌ பார்ப்பனர்கள், ஆங்கிலேயருக்கு காட்டியும் , கூட்டியும் கொடுத்ததால் மன்னர்களானவர்கள் (அவ்வாறு இல்லாதவர்களெல்லாம் கொல்லப்பட்டார்கள் என்பது வரலாறு கூறும் செய்தி), தொழிலதிபர்கள் இவர்களின் ஆதரவும் காந்திக்கு தேவையாக இருந்தது. காந்தி இவர்கள் அனைவரின் கருத்தியலுக்கும் ஒத்து போனார். இதனால் அன்றைய இந்தியாவின் அடையாளமாக காந்தி மெல்ல, மெல்ல உருமாற்றப்பட்டார்.
என்ன காந்தி துரோகியா? ஆங்கிலேய அரசின் அடிமையா? எதை வைத்து நீங்கள் இவ்வாறு கூறுகின்றீர்கள் என நீங்கள் என்னை கேட்கலாம். இதற்கான சான்றுகள் பல எம்மிடம் உள்ளன. இங்கே சில முக்கியமானவற்றை கூறுகின்றேன். எந்த ஒரு ஏகாதிபத்தியத்திற்கும் “புரட்சி” “புரட்சியாளர்கள்” போன்ற சொற்களே ஒவ்வாமை(alergy) நோயை வரவழைத்துவிடும். புரட்சியையும், புரட்சியாளர்களையும் அழித்தொழிப்பதே ஏகாதிபத்தியங்களின் வேலை. ஆனால் இந்தியாவில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அந்த வேலையை இல்லாமல் பார்த்து கொண்டார் காந்தி. ஆம் இந்தியாவில் தோன்றிய புரட்சிகளையும், புரட்சியாளர்களையும் கருவறுப்பதையும் தனது முதல் வேலையாக பார்த்துக் கொண்டார் காந்தி. இந்த கருத்தியல் தான் காந்தியை ஆங்கிலேயர்கள் உயர வளரவிடுவதற்கு முக்கிய காரணமாகும். காந்தி இந்தியாவில் தோன்றிய பகத்சிங், சுபாஷ் சந்திர போஸ் போன்ற புரட்சியாளர்களை வேரறுப்பதில் ஆங்கிலேயர்களை விட மிக தீவிரமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பகத்சிங்கை தூக்கிலட காந்தி ஒப்புதல் அளித்தது மிக தெளிவாக காந்தி‍ இர்வின் ஒப்பந்த பதிவுகளிலும், அவரின் சீடரான சீதாரமையா எழுதிய இந்திய தேசிய காங்கிரசு என்ற நூலிலும் உள்ளது. பகத்சிங்கின் தியாகத்தீ இந்தியாவில் பற்றி எரியாமல் இருப்பதற்காக அவர் பார்த்த பணிகள் எல்லாம் கராச்சி காங்கிரசு மாநாட்டு பதிவுகளில் உள்ளது. இதை எல்லாம் ஒரு படி மேலே போய் அரசுக்கு ஆலோசனை கூறும் “அரச குரு” பதவியில் காந்தி ஈடுபட்டதும் உண்டு. அது வெளி வந்ததும் பகத்சிங்கின் மூலமாக தான். இதோ..

……..

அந்த கடிதத்தில், எமர்சன், பகத்சிங் தண்டனை குறித்து நேற்றிரவு உங்களோடு பேசியபடி…’ என்று தொடங்கும் அக்கடிதத்தில் அன்று மாலை நடைபெறவிருக்கும் ஒரு கூட்டத்தைப் பற்றி பேசப்பட்டுள்ளது. பகத்சிங்கின் தண்டனையை குறைக்கச் சொல்லி வலியுறுத்துவதற்காக, சுபாஷ் சந்திர போஸ் பேசவிருக்கும் கூட்டம் அது. அகூட்டத்தைப் பற்றி குறிப்பிட்டு, அது மக்கள் மத்தியில் உணர்ச்சியை தூண்டக்கூடும் என்பதால், அதனை எப்படி ஒடுக்குவது என்று காந்தியிடம் அக்கடிதத்தில் யோசனை கேட்கப்பட்டுள்ளது. இதற்கு உடனே பதில் கடிதம் எழுதினார் காந்தி.
என் அருமை எமர்சன்,

சற்று நேரத்திற்கு முன்பு பெறப்பட்ட தங்கள் கடிதத்திற்கு நன்றி. தாங்கள் குறிப்பிட்டுள்ள, அக்கூட்டம் பற்றி நான் அறிவேன். என்னாலியன்ற எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன் என்பதோடு, விரும்பத்தகாத எதுவும் நடைபெறாது என்றும் நம்புகிறேன். எவ்வகையான காவல்துறை அணிவகுப்பும், தலையீடும் வேண்டாம் என்று நான் யோசனை கூறுகிறேன். கொந்தளிப்பான நிலை அங்கு இருக்கக்கூடும். அத்தகைய நிலை, கூட்டங்கள் போட்டு பேசுவதன் வாயிலாக வெளியேற அனுமதிப்பது நல்லதாக அமையும்.

த‌ங்களின்
நேர்மையுள்ள,
எம்.கே.காந்தி.

(பகத்சிங்கும் இந்திய விடுதலை என்ற நூலில் இது வெளிவந்துள்ளது. அவர்களுக்கு என் நன்றிகள்)
……………………………


இதற்கு நேரடியாக தங்கள் அடிமையும், ஆலோசகருமான எம்.கே.காந்தி என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கலாம். இது போன்ற‌ மக்கள் புரட்சிகளுக்கும், புரட்சியாளர்களையும் கருவறுக்கும் வேலையை காந்தி பல முறை செய்துள்ளார். சௌரி சௌரா மக்கள் போராட்டத்திற்கு பின்னர் இது போன்ற போராட்டங்கள் தவறு எனக்கூறி காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார் (ஆனால் ஒரு முறை கூட ஆங்கிலேய அரசை எதிர்த்தோ, விடுதலை வேண்டியோ காந்தி உண்ணாவிரதம் இருந்ததே கிடையாது என்பதை நினைவில் கொள்க). இதிலிருந்து காந்தி என்ற மக்கள் துரோகி ஏகாதிபத்திய ஆங்கிலேய அரசின் கருத்தியலிற்கும், ஆங்கிலேய அரசிற்கும் செய்த அடிமைப் பணிகள் செவ்வனே தெளிவாகின்றது. ஆங்கிலேய அரசை அண்டி பிழைத்ததால் அவர்களின் கருத்தியல் தான் அப்பொழுதிருந்த மன்னர்களிடமும், தொழிலதிபர்களிடமும் இருந்ததால் காந்தி இவர்களுக்காக தனியாக ஏதும் செய்ய தேவை இல்லாமல் போனது. அடுத்து பார்ப்பனர்களின் கருத்தியலிற்கு காந்தி ஒத்து போனதை பார்ப்போம்.
பார்ப்பனிய கருத்தியலான “இந்து கட்டமைப்பை” காந்தி தான் இறக்கும் காலத்திற்கு முன்பு வரை மிக செவ்வனே காப்பற்றி வந்தார் என்பதை அவரின் கருத்தியலான “இராம இராச்சியம் அமைப்பேன்” என்பதிலிருந்தே புரிந்துகொள்ளலாம். இதனால் தான் காந்தி “இந்து கட்டமைப்பினால்” அதிகம் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களை மேலும் கேவலப்படுத்தும் விதமாக “ஹரிஜன்” என்று பெயரிட்டழைத்தார். புற்றுநோயை குணப்படுத்த நல்ல சட்டை போட்டால் போதும் என்ற தனது பரிசோதனையை காந்தி இங்கே செய்து பார்த்தார். பல சமூக சீர்திருத்தம் ஏற்ப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் புகுத்தப்பட்ட கிருத்தவ மதமே கல்லறையில் கூட பிரித்து வைத்து வன்மம் காட்டி வருகின்றது ( http://www.bbc.co.uk/news/world-south-asia-11229170 ) என்றால் அன்றைய காலகட்ட இந்தியாவை பார்ப்பனர்கள் தான் ஆண்டார்கள்(97% அரசு பணிகளில் இருந்தவர்கள் பார்ப்பனர்களே) என்று நினைக்கும் போதும், அவர்களை இந்து மதத்தின் கொள்கைகள் என்று கூறி எவ்வாறெல்லாம் சித்ரவதை செய்திருக்கும் என்பதை நீங்கள் இப்பொழுது எண்ணிகூட பார்க்கமுடியாது. அப்படி பட்ட காலகட்டத்தில் தான் காந்தி கூறினார், நீங்கள் கடவுளின் குழந்தைகள், அவர் கூறிய இந்து மத கொள்கைகள் படியே வாழ வேண்டும் என. காந்தியின் துரோகம் இத்துடன் முடிந்துவிட்டதா என்றால் இல்லை. “இந்து மத கட்டமைப்பு” தாக்கப்பட்ட போதெல்லாம் முதல் ஆளாக வந்து முட்டு கொடுத்தவர் காந்தி. இதே போன்ற “இந்து மத கட்டமைப்பு” தகர்க்க கூடியதாகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உரிமை வழங்கிய பூனா இரட்டை வாக்குரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டாக்டர்.அம்பேத்காரை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் காந்தியை பார்ப்பனர்கள் தங்கள் தலையின் மீது தூக்கிவைத்து கொள்ள உதவின. ஆனால் அதே நேரத்தில் காந்தி எப்பொழுது “இந்து கட்டமைப்பு” கருத்தியலிலிருந்து விலகி சென்றாரோ அப்பொழுதே அவரை தங்களிடம் உள்ள மத‌வெறியர்களில் ஒருவன் மூலமாக சுட்டும் கொன்றார்கள். ஆனால் இது நடந்தது “துரோகி காந்தி” மகாத்மாவாக கட்டமைக்கப்பட்ட பின்னர் என்பதால் பார்ப்பனர்களால் காந்தியை மக்கள் மனதில் இருந்து அகற்றமுடியவில்லை. இதிலிருந்து காந்தி பார்ப்பனீய கருத்தியலுக்கு ஒத்து போனார் என்பதும் வெட்ட வெளிச்சமாகின்றது.


இதுவரை நாம் காந்தி கருத்தியல் ரீதியாக எப்படி ஆளும் அரசிற்கும், அப்போதைய ஆதிக்க வகுப்பிற்கும் துணைபோனார் என்பதை பார்த்தோம். இனி காந்தியுடைய சிறப்பு என்று கூறப்படும் தனிப்பட்ட குணநலன்களை பார்ப்போம்.
காந்தி ஒரு அகிம்சாவாதி. அகிம்சாவாதி என்றால் எந்த ஒரு உயிரையும் துன்புறுத்தாதவர் என பொருள். இதன் படி காந்தி அகிம்சாவதியா என பார்ப்போம். பகத்சிங்கை தூக்கிலிட்டு கொள்வதற்கு ஒப்புதல் அளித்தவரும், இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் படையில் சேர்ந்து மக்களை கொல்வதற்கு ஊர், ஊராக சென்று ஆள் திரட்டிய தரகருமான காந்தி எப்படி அகிம்சாவதியாவார்? என்பதே என் கேள்வி. இதிலிருந்து அவர் ஒரு அகிம்சாவதியும் இல்லை என்பது தெளிவாகின்றது. ஆறாவது அறிவான பகுத்தறிவை கொண்ட, படித்த முற்போக்கானவர்கள் என்று தங்களை கூறிக் கொள்ளும் இன்றைய இளைய சமூகம் எப்படி காந்தியை அகிம்சாவதி எனக் கூறுகின்றார்கள் என எனக்கு கேள்வி எழும்புகின்றது. இதற்கு முக்கிய காரணம் இது தான் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ளது என்பதும், பொது புத்தியிலிருந்து விலகி இது போன்ற கட்டுகதைகளை உடைக்கவியலாத அவர்களின் கையாலாகாத தன்மையுமே காரணம். மேலும் எங்கே நம்மை சமூகம் தேசதுரோகியாக பார்த்துவிடுவார்களோ என்ற பயமும் அவர்களிடம் உள்ளது என்பதும் மறுக்கவியலாத உண்மைகள். அகிம்சாவாதம் என்ற கருத்தியலில் தான் அவரின் எல்லா போராட்டங்களும் உருவானதால், அவை எல்லாம் இங்கே உடைப்பட்டு போய் நிர்வாணமாக காட்சியளிக்கின்றன.


அடுத்து நான் இங்கே வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு காந்தி பேராசை கொண்ட ஒரு சர்வாதிகாரி என்பதே. ஆம் எங்கே நாம் இவ்வளவு நாள் சிரமப்பட்டு மக்களுக்கு குழிபறித்து உருவாக்கிய அந்த அடையாளத்தை இழந்து விடுவோமோ என்ற பயம் காந்திக்கு எப்போதுமே உண்டு. அதனால் தான் அவரே காங்கிரசில் சேர்த்த சுபாஷ் சந்திர போஸ் பின்னாளில் வளர்ந்து அவர் நிறுத்திய வேட்பாளரான பட்டாபி சீத்தாரமைய்யாவை தோற்கடித்த போது காந்தி தனது ஆதரவாளர்களையும் , மற்றவர்களையும் போஸ்ஸீன் எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ள விடாமல் தடுத்து சுபாஷ் சந்திர போஸே வெறுத்து காங்கிரசை விட்டுமட்டுமல்ல இந்தியாவை விட்டே வெளியேற தேவையான எல்லா அரசியலையும் செய்தார் காந்தி. இதே போல பகத்சிங்கின் புகழ் வழக்காடு மன்ற பிரச்சாரம் மூலமாக வேகமாக வளர்ந்து வந்த போது அதை கண்டு பயந்து அவரை கொல்வதற்கு ஆங்கிலேய அரசிற்கு எல்லா உதவிகளையும் அளித்தார்.
இப்படிப்பட்ட பச்சோந்தி கொள்கைகளையுடைய, சர்வாதிகாரியும், மக்கள் துரோகியுமான காந்தி முதலில் ஒரு மனிதனா என்று உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள் நண்பர்களே.
நட்புடன்
ப.நற்றமிழன்.

Thursday, August 12, 2010


இறைவன் இருக்கிறானா
மனிதன் கேட்கின்றான்
இறைவனைத் தான் நாம்
சிலுவையில் அறைந்து கொன்றுவிட்டோமே

மதங்கள் என்ற பெயரால்
இன்னும் அவனை கூறு போடுகிறோம்
இறைவனை
நம் அசிங்க சந்தைகளில்
தரகனாகி
நம் ஆபாச மனஉணர்வுகளை சித்தரிக்கும்
நடிகனாகி
நம் குப்பைகளை எல்லாம் கொட்டும்
குப்பை தொட்டியாகி
பல வழிகளில் பல முறை
அவனை கொன்று விட்டோமே

இறைவன் படைத்தது
ஒரு மனிதனை
இந்த மதங்கள் படைத்தது
பல கடவுள்களை
அந்த கடவுள்களுக்கு இடையிலும்
யார் உயர்ந்தவன் என்ற போட்டி
அவர்களையே மோத விட்டு
வேடிக்கை பார்ப்பவன் மனிதன்

மதங்கள் மனிதனுக்கு ஒரு
சாபக்கேடு இங்கே
மதம் படித்தவர்களை விட
மதம் பிடித்தவர்களே அதிகம்

மதங்கள் சமாதனப் புறாக்கள் என்றால்
அதன் கால்களில்
மாமிச துண்டுகள் ஏன்
அதன் சொண்டுகளில்
இரத்தம் சொட்டுவது ஏன்

மதங்கள் அமுதக் கலசங்கள் என்றால்
அதில் ஆலகால விஷம்
பொங்குவது ஏன்

ஏமாறும் பசுக்களை
ஏமாற்றும் வைக்கோல் கன்றுகளாக
இன்றைய மதங்கள்

Friday, May 28, 2010

தமிழ்

இதயத்தில் இனிக்கின்ற
மொழி - தமிழ்
மொழியினுள் துடிக்கின்ற
இதயம்

கவிதைக்குள் விளைகின்ற
வைரம் - தமிழ்
வைரத்துள் ஒளிர்கின்ற
கவிதை

விரலுக்குள் ஊறிவரும்
எழுத்து - தமிழ்
எழுத்தினில் நிமிர்கின்ற
விரல்

ஓசைக்குள் கூடுகட்டும்
சுகம் - தமிழ்
சுகங்களில் வெடிக்கின்ற
ஓசை

தமிழனின் அகதி வாழ்க்கை.

தமிழனின் அகதி வாழ்க்கை.



தமிழன் அகதியாய் வந்து
அவதியில் வாழ்கிறான்
தூரதேசம் சஞ்சரிக்கும்
பறவை ஒன்று
தன் தாய்நாடு
திரும்பும் நிலைதான்....

ஒவ்வொரு
தாய்நில தமிழனின்
வெளிநாட்டு வருகையும்

மடிகின்ற மரங்கள் எல்லாம்
மனக் கவலையுடன் இறப்பதில்லை
ஆனால்......

தமிழனாகிய நம்முடய நிலை?
தமிழன் எப்போது நிலையாகுவது?

எட்டு திசையிலும்
திக்கு திக்காக
வாழ்கின்ற தமிழன்
எப்போது ஒன்று கூடுவது?
காலம் பதில் சொல்லுமா?

காலத்திற்காக
காத்திருந்தது போதும் தமிழா!
விழித்திடு! எழுந்திடு!

காலத்தின் கையில்
நாம் இல்லை
நம்முடைய கையில்தான்
காலம் உள்ளது.

எழுந்திடு தமிழா
வெற்றி நடை போட
எழுந்திடு.

தமிழினமே கலங்காதே

ஆரத் தழுவி அடிமனத்தைத் தொடுகின்ற
செந்தமிழே திருவாய் மலர்ந்திடுவாய்
நாடு நகரிடை வாழும் மக்களிடை
நெடு நாளாய் வீற்றிருக்கும் பைந்தமிலே
வீடு வளவின்றி வீதியோரங்களில் வாழ்கின்ற
தமிழினத்தின் விம்மலினை சுமந்த தாய் மொழியே
உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி நாதிஎதுவுமின்றி
பாடாய்ப்படுகின்ற பாவித் தமிழ் இனத்தை பார்த்தாயா
தமிழ் இனத்தின் பெருநிலமாம் வன்னியே அங்கே
சிங்கள இனவெறியின் குண்டுகளால் சிதறிட்டே
அங்கிருந்த தமிழரெல்லாம் ஐயோ என்று கதறி ஓடினரே
குண்டுபட்டு தமிழினமே அழிந்திட்ட நேரத்தில்
மீதியிருந்த தமிழினமோ முட்கம்பி வேலிகளில் தவிக்கிறதே
எம்மவரை காப்பார்கள் மேலைநாடுகள் என்று
புலம்பெயர் தமிழரெல்லாம் வீதியிலே இறங்கினோமே
கடைசியிலே தமிழினத்தின் புதை குழியையும் காணலையே
தமிழ் இனத்தை அழித்திட்ட காடையருக்கு எம் சக உறவுகளே
பொன்னாடை என்று பன்னாடை போத்தி வீரவாழ்த்துக் கூறி வந்தனரே
எம் தொப்புள்க்கொடி உறவென்று கூறிடும் எம் சக இனமே வீதியிலே நிற்கிறதே
எம் இனத்தின் தலைவரென்று தன்னைத்தானே கூறிடும் எங்கள் ஐயா
உன் காலத்தில் ஈழத்தமிழினம் கண்ட சோதனைகள் என்றுமே நாம் மறவோம்
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்று ஒரு கவிஞன் கூறினான்
அந்தத்தமிழினமே சின்னாபின்னமாகி கிடக்கிறது பார்த்தாயா
தமிழினத்தின் வேதனையை தீர்த்திடவே
பொங்கி எழுந்திடுவோம் புலத்துத் தமிழரெல்லாம்
முட்கம்பி வேலிகளை உடைத்தெறிய புறப்படுவோம்
எங்கள் தன்மானத்தமிழினத்தை காத்திடப் புறப்படுவோம்
விடிவானம் தெரிகிறது தமிழீழம் மலரத்தான் போகிறது
எம் இனத்தின் நெடுந்துயரம் களையத்தான் போகிறது
காற்றே நீ கனக்காதே காலம் எம் கையில்
கயவனவன் கதிகலங்கி ஓடும் காலம் வெகு தொலைவில் இல்லை
அதுவரை நாங்கள் சர்வதேச தலைவர்களின் மெளனத்தை கலைத்திடுவோம்
ஈழத்தமிழினமே எழுந்திடு தமிழீழம் காணும் வரை எழுந்திடு!!!

தமிழே நீ வாழ்க

அறத்துடன் மறம்கலந்து
அண்டமே திண்டாட ஆட்சி செய்த
அன்புத்தமிழே,அறத்தமிழே,என்தாயே
மறம் காத்த மண்ணிலே
திறம் காத்த உன்னோர்கள்
மதிமயங்கி எங்கேனும்
மடிந்து போனாலும்
என் கண்கள் தூங்காது
உனைப் பாடத் தயங்காது
விண்வெளியில் உன் பெயரில்
வீடமைக்க வேண்டும்-அதில்
என் தமிழை உலகமெலாம்
என்நாவால் பரப்பிடுவேன்
உன் பிள்ளை உனக்காக
பா உரைக்க வேண்டும்
கண்பார்க்கும் தூரமெல்லாம்
நீ நீயாக வேண்டும்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என
தமிழையே தாய்மொழியாக
புலத்துத் தமிழரெல்லாம்
பேச்சில் பரப்ப வேண்டும்
மறத்தமிழ் என்றுமே மறையாது
எம் வீரம் என்றுமே மண்ணிலே அழியாது
வாழ்கதமிழ்,வளர்க தமிழ்மொழி.

தமிழ் ஒரு செம்மொழி

தடுக்கி விழுந்தால்
மட்டும் அ…ஆ…

சிரிக்கும்போது
மட்டும் இ..ஈ..

சூடு பட்டால்
மட்டும் உ…ஊ..

அதட்டும்போது
மட்டும் எ..ஏ…

ஐயத்தின்போது
மட்டும் ஐ….

ஆச்சரியத்தின்போது
மட்டும் ஒ…ஓ…

வக்கணையின் போது
மட்டும் ஒள

விக்கலின்போது
மட்டும் எ ஏ …..

என்று தமிழ் பேசி
மற்ற நேரம்
வேற்று மொழி பேசும்
தமிழரிடம்
மறக்காமல் சொல்
உன் மொழி
செம்மொழியென்று

ஈழத் தமிழன் விதி!!

வரமுடியவில்ல அம்மா
தீய முந்தி உந்தன்
திரு உடலில் முத்தமிட...

சிங்கமும் நரிகளும் பங்கும்
நீர்சுனயின் வழி அஞ்சி
உயிர் வற்றும் மானானேன்.
சென்னச் சுவர்பால
டிக்கும் பல்லி வாலானேன்.

தோப்பாகும் கனவோடு நீ சுமந்த
நறுங் கனிகள தின்றதே
ஈழத் தமிழன் விதி என்ற
பேர் அறியா தேசத்ப் பறவ.
ருவக் கர ஒன்றில்
அதன் பீயாய் விழுந்தேனே
என் கனிகள சுமந்தபடி

இறால் பண்ண நஞ்சில்
நெய்தல் சிதந்தழியும்
சேக் கரயோரம்
படகுகளும் இல்ல.

கண்ணீரால் உன்மீ
எழுதாத கவிதகள
காலத்தில் எழுகிறேன்...
விடுதலைப் புலிகளால் தமிழ்ச் சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ள போராட்டத்தின் இன்றைய வடிவமே நாடு கடந்த அரசாங்கம்: விளக்கக் கோவை வெளியீடு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான (Transnational Government of Tamil Eelam) கருத்தினை - தமிழீழ விடுதலைப் புலிகள் முன்மொழிந்து தமிழ்ச் சமூகத்திடம் கையளித்துள்ளனர்.
வரலாற்றின் இந்த இயங்கியல் போக்கைப் புரிந்துகொண்டு - தனித்துவமானதும், பொதுமைத்தன்மை கொண்டதும், தமிழ் பேசும் மக்கள் எல்லோரையும் ஒன்றிணைக்கும் ஓர் அமைப்பாக அதனை அமைக்க தமிழ் இனம் முன்வரவேண்டும். இது மேல் இருந்து திணிக்கப்படும் ஒன்று அல்ல; முற்றாக - கீழ் இருந்து மேல் நோக்கி கட்டி எழுப்பப்படும் ஒரு ஜனநாயக அமைப்பு என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள செயற் குழு தெரிவித்துள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாக எழக்கூடிய பல்வேறு கேள்விகளையும் ஐயப்பாடுகளையும் தெளிவுபடுத்தும் விதமாக – அதனை உருவாக்குவதற்கான செயற்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள கேள்வி - பதில் வடிவத்திலான முதற்கட்ட விளக்கக் கோவையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்தச் செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்களால் வெளியடப்பட்டுள்ள குறிப்பும், விளக்கக் கோவையும் கீழே தரப்பட்டுள்ளது:

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்: சில விளக்கக் குறிப்புக்கள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (Transnational Government of Tamil Eelam) ஒன்றினை அமைப்பதற்கான திட்டம் ஒன்று முன்வைக்கப்ட்டுள்ளதனையும் அதனை உருவாக்குவதற்கான செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதனையும் தாங்கள் அறிவீர்கள்.

இத்தகைய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கான தேவைகளை வெளிப்படுத்தி திட்ட முன்னறிவிப்பினை 16.06.2009 அன்று ஊடகங்களுக்கான அறிக்கை மூலம் வெளிப்படுத்தியிருந்தோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் திட்டம் அறிவிக்கப்பட்ட பின்னர் பல்வேறு மட்டங்களிலும் இந்தத் திட்டம் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள், விவாதங்கள் நடைபெற்று வருவதனை அவதானிக்க முடிகிறது.

இது நல்ல ஒரு அறிகுறி. நமது அடுத்த காலடிக்கு அத்தியாவசியமானதும் கூட. ஆரோக்கியமான விவாதங்கள் குழப்பத்தை ஏற்படுத்துவது இல்லை. மாறாகத் தெளிவினையே எற்படுத்தும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாக எழக்கூடிய பல்வேறு கேள்விகளுக்குரிய எமது கருத்தை வினா - விடை வடிவிலான விளக்கக் குறிப்பாகத் தற்போது வெளிப்படுத்துகிறோம்.

இது முதற்கட்ட விளக்கக்கோவையே. திட்டம் தொடர்பான மேலதிகத் தகவல்கள், விளக்கங்களை நாம் தொடர்ந்தும் வெளிப்படுத்துவோம்.

இந்த விளக்கக்கோவை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான கருத்துப் பரிமாற்றத்தை மேலும் வலுப்படுத்த துணை புரியும் என நம்புகிறோம்.

இந்த விளக்கக்கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளவை தற்போது சிந்தனையில் உள்ள விடயங்களே.

இவற்றில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும் நாம் புரிந்து கொள்கிறோம். இதனால், தொடர்ச்சியாக மக்கள் அமைப்புக்களதும் மக்களதும் கருத்துக்களை உள்வாங்கி அதற்கேற்ப தேவையான மாற்றங்களை செய்து திட்டத்தை நடைமுறைப்படுத்துவதனையும் நாம் கவனத்தில் கொண்டுள்ளோம்.

இந்தத் திட்டம் தொடர்பான தங்கள் கருத்துக்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நல்ல பல ஆலோசனைகளை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறோம்.

எம்முடனான தொடர்புகளுக்கான மின்னஞ்சல் முகவரி: info@govtamileelam.org

திரு விசுவநாதன் உருத்திரகுமாரன்
இணைப்பாளர்

1. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்றால் என்ன?

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (Transnational Government of Tamil Eelam) தமிழீழ மக்களின் அரசியல் வேட்கையினை உயிர்ப்புடன் பேணி தமிழர் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் எனும் அடிப்படை உரிமைக் கோட்பாடுகளின் வழியாக தமிழீழ மக்களின் விடுதலையினை வென்றெடுப்பதற்கான ஒரு நிறுவனமாகும். இது ஒரு புதுமையான எண்ணக்கரு.

தமது தாயகத்தில் தமிழீழ மக்கள் தமது அரசியல் கோரிக்கைகளினையும் உணர்வுகளினையும் வெளிப்படுத்துவதற்கும் அதற்காகச் செயற்படுவதற்கும் இப்போது எந்தவித வாய்ப்புக்களும் இல்லை.

சிறிலங்கா அரசு சட்டரீதியான தடைகளுக்கு ஊடாகவும் இராணுவ ஆக்கிரமிப்பின் ஊடாகவும் படுகொலைகளுக்கு ஊடாகவும் தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையினையும் உரிமைக் குரலினையும் ஒடுக்க முனைகின்றது.

இந்நிலையில் தமிழீழ தேசத்தின் அங்கமாகிய புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு உள்ள ஜனநாயக வாய்ப்புக்களைப் பயன்படுத்தி தமிழீழ தேசத்தின் விடுதலைக்காகப் பாடுபடும் அதிஉயர் மக்கள் பீடமாக இந்த நாடு கடந்த அரசாங்கம் அமைக்கப்படுகிறது.

தாயகத்தில் வாழும் அரசியல் தலைவர்களும் மக்களும் இந்த அரசாங்கத்தில் பங்குபெறுவது நடைமுறைச் சாத்தியம் இன்மையால் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகள் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் மத்தியில் இருந்து ஜனநாயக முறையில் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த அரசு தாயகத்தில் இருக்கும் நேச சக்திகளுடன் கைகோர்த்துப் பயணிக்கும்.

2. நாடு கடந்த தமிழீழ அரசு ஏன்? அதற்கான அவசியம் எவ்வாறு ஏற்பட்டுள்ளது?

ஈழத் தமிழர்களின் சமூக இருப்பு என்பது அவர்களின் அரசியல், பண்பாடு, பொருளாதாரம், வாழ்வியல் ஆகியவற்றின் தனித்துவத்தினை தக்கவைப்பதிலும் உலகின் ஏனைய சமூகங்களுடன் இணைந்தும் இணையாகவும் செழுமைப்படுத்துவதிலுமேயே தங்கியுள்ளது.

இதனை சிறப்பாக அடைவதற்கும் அச்சுறுத்தல்களினை ஏற்படுத்தக்கூடிய காரணிகளினைக் கட்டுப்படுத்தி வெற்றிகொள்வதற்கும் ஏதுவாக ஒரு உறுதியானதும் தன்னாட்சி உரிமையினைக் கொண்டதுமான அரசியல் கட்டமைப்பு அவசியமாகவுள்ளது. இது 1976 ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டை தீர்மானமாக வடிவம்பெற்று 1977 ஆம் ஆண்டில் மக்கள் ஆணையாக உறுதிப்படுத்தப்பட்டது. 1985 ஆம் ஆண்டு திம்பு கோட்பாடுகள் இதற்கு மேலும் வலுச்சேர்த்தது.

இலங்கைத் தீவுக்குள் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக வளர்த்து எடுக்கப்பட்டு - இன்றைய நிலையில் கூர்மையடைந்துள்ள இராணுவ மயப்படுத்தப்பட்ட அரசியல் கட்டமைப்பும், பௌத்த சிங்கள மேலாதிக்க சமூகத்தினை சார்ந்த அரசியலமைப்பும் அதன் அடிப்படையான சட்டங்களும் ஏனைய தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகளினையும் நல்வாழ்வினையும் மறுத்துள்ளது.

இவை தமிழ் மக்களினதும் பௌத்த சிங்களவர் அல்லாத ஏனைய இனங்களினதும் அரசியல் தனித்துவத்திற்கும் சமூக இருப்புக்கும் சுதந்திரமான பண்பாட்டு வளர்ச்சிக்கும் மிகப்பெரும் தடைகளாக விளங்குகின்றன.

அத்துடன், தமிழ் மக்கள் தங்கள் அரசியல் வேட்கையினை சுதந்திரமாக தெரிவிப்பதற்கும் அதற்காக குரல் எழுப்பி போராடுவதற்கும் இலங்கைத் தீவின் உள்ளக நிலைமைகள் மிகப்பெரும் தடையாகவும் அச்சுறுத்தலாகவும் உள்ளன.

தீவில் வாழும் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் ஒருவகையில் அரசியல் கைதிகளாகவும், உரிமைகளுக்காக போராடுவதில் இருந்து தடுக்கப்பட்டவர்களாகவும் அடிமைகளாக வாழவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளையில் சிங்கள அரசின் தலைவர்களும், கொள்கை வகுப்பாளர்களும், இராஜதந்திரிகளும் இராணுவத் தளபதிகளும் இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கு எதுவித பிரச்சினையும் இல்லை என்றும் அரசில் தீர்வு என்பது அவசியமற்றது எனவும் உள்நாட்டிலும் அனைத்துலக மட்டங்களிலும் பிரகடனம் செய்து வருகின்றனர்.

இவற்றினை எல்லாம் எதிர்கொண்டு தமிழ் மக்களின் அரசியல் தன்னாட்சி உரிமையினை வென்று எடுப்பதற்கு வேண்டிய பணிகளினை பல்வேறுபட்ட அணுகுமுறைகளுக்கு ஊடாக முன்னெடுக்க வேண்டிய பாரிய கடமை இலங்கைத் தீவில் இருந்து வெளியேறி வாழ்கின்ற புலம்பெயர் தமிழ் மக்களின் கைகளில் வீழ்ந்துள்ளது. அதனை முன்னெடுப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்டதும் மக்களின் ஆணையினைப் பெற்றதுமான ஒரு கட்டமைப்பின் அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. அதுவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என தற்போது முன்மொழியப்பட்டுள்ளது.
3. நாடு கடந்த அரசாங்கத்திற்கும் (Transnational Government) புகலிட அரசாங்கத்திற்கும் இடையில் (Government in Exile) வேறுபாடுகள் ஏதும் உண்டா? அல்லது இரண்டும் ஒன்றா?

இந்த இரண்டு அரசாங்கங்களின் செயற்பாடுகளுக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருந்தாலும் இந்த இரு அரசாங்கங்களும் கோட்பாட்டு ரீதியில் வேறானவை.

புகலிட அரசாங்கம் தமது நாட்டில் இயங்க முடியாத சூழலில் தமது நாட்டைவிட்டு தப்பி ஓடிவரும் அரசியல் தலைவர்கள் தமக்கு ஆதரவளிக்கக்கூடிய நாடு ஒன்றில் அடைக்கலம் புகுந்திருந்து அமைக்கும் அரசாங்கமாகும். தமது நாட்டுக்கு திரும்பிச் சென்று அரசியல் செய்யக்கூடிய சூழ்நிலை வரும்போது புகலிட அரசாங்கத்தினைச் சேர்ந்தவர்கள் பொதுவாகத் தமது நாடுகளுக்குத் திரும்பிச் சென்று தமது நாட்டில் அரசியல் வேலைத்திட்டங்களில் ஈடுபடுவர்.

புகலிட அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு நாடு முன்வருதல் அவசியம். புகலிட அரசாங்கம் செயற்படுவதற்கு புலம்பெயர்ந்து வாழும் மக்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. புகலிட அரசாங்கம் பொதுவாக தனது ஆளுகைக்கு உரிய விடயங்களாக தமது தாயகத்து விடயங்களை மட்டுமே கொண்டிருக்கும்.

நாடு கடந்த அரசாங்கம் புகலிட அரசாங்கத்தினைக் கடந்த ஒரு புதிய முறையாகும். அதன் கோட்பாட்டு அடிப்படை கடந்த இரு தசாப்தங்களாக சமூக அறிஞர்களின் கூடுதல் கவனத்தினை ஈர்த்துள்ள புலம்பெயர்ந்து வாழும் மக்களின் நாடு கடந்த வாழ்க்கை முறையுடனும் (Transnational life) நாடு கடந்த அரசியலுடனும் (Transnational Politics) தொடர்புபடுகிறது.

புலம்பெயர் மக்கள் தாம் வாழும் நாடுகளில் தமது வாழ்வினை அமைத்துக்கொள்ளும்போது தமது தாயகத்துடனும் தமது மக்கள் பரவிச் சிதறி வாழும் ஏனைய நாடுகளுடனும் எல்லைகள் கடந்த உறவைப் பேணிவருகின்றனர்.

இவர்களது வாழ்க்கை முறை தாம் வாழும் நாடுகளின் எல்லைகளுக்குள் சுருங்கி விடுவதில்லை. நாடுகள் கடந்த ஒரு சமூகமாக இவர்கள் தமது வாழ்க்கையினை அமைத்துள்ளனர். தாம் வாழும் நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்ட முறையில் தமது வாழ்வினை இவர்கள் அமைத்துக் கொண்டபோதும் இவர்களது அரசியல் சமூக பொருளாதார மற்றும் பண்பாட்டு அம்சங்களைத் தீர்மானிப்பதில் நாடு கடந்த சமூக வெளி (Transnational Social Space) முக்கிய பங்கினை வகிக்கிறது.

ஈழத் தமிழரின் புலம்பெயர் வாழ்க்கையும் இவ்வாறுதான் உள்ளது.

புலம்பெயர் தமிழ் மக்கள் மட்டுமல்ல தாயகத்தில் வாழும் தமிழ் மக்களும், நாடு கடந்து தமது தொடர்புகளைப் பேணிய வண்ணம் தமது வாழ்வினை தாயகத்தில் அமைத்துள்ள ஒரு சூழலில் அந்த மக்களும் ஈழத் தமிழரின் நாடு கடந்த சமூக வெளியின் அங்கமாவே உள்ளனர்.

மேலும், ஈழத் தமிழரின் அரசியல் இலங்கைத்தீவின் வடக்கு - கிழக்குப் பகுதிகளுக்குள் சுருங்கி விடவில்லை. ஈழத் தமிழர்களின் அரசியல் தற்போது நாடு கடந்த அரசியலாக மாற்றம் கண்டுள்ளது. தற்போது நாம் பேசுகின்ற தேசியம் பன்முகப்பாடானதும் சமூக நலன்மிக்கதும் ஜனநாயக அடிப்படைகளில் கட்டி எழுப்பப்படுவதும் ஆகும்.

தற்போது அமைக்கப்படவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நாடு கடந்த சமூக வெளியில் வாழ்ந்து வரும் தமிழீழ மக்களால் தமிழீழ மக்களின் அரசியல் வேட்கைகளை வென்று எடுப்பதற்காக அமைக்கப்படுகிறது.

தமிழர் தேசத்தின் அரசியல் வேட்கைகளை மட்டும் அன்றி தாயகத்திலும் புலத்திலும் வாழும் தமிழீழ மக்களது சமூக, பொருளாதார, பண்பாட்டு மேம்பாட்டினையும் இந்த நாடு கடந்த அரசாங்கம் தனது ஆளுகைக்குள் கொள்ளும்.

மக்களால் மக்களில் தங்கி நிற்கக்கூடிய முறையில் இந்த அரசாங்கம் அமைக்கப்படுவதால் இதன் செயற்பாடுகளுக்கு நாடுகளின் அங்கீகாரம் என்பது முன்நிபந்தனையாக இருக்காது.

தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பொது அமைப்புக்கள் இந்த அரசாங்கத்தினத் தாங்கி நிற்கும் தூண்களாக இருக்க வேண்டும். மக்களில் தங்கி நின்றவாறே அனைத்துலக அரங்கில் தமிழர் தேசியம் தாயகம் சுயநிர்ணயம் என்ற கோட்பாடுகளின் அடிப்படையில், இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு உலக நாடுகளினதும் மக்களதும் ஆதரவினை இந்த அரசாங்கம் திரட்டும்.

தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக அரசியல் இராஜதந்திர வழிமுறைகளுக்கு ஊடாகப் போராடும்.

4. நாடு கடந்த அரசாங்கம் உருவாகிவிட்டதா? இல்லை எனின் அறிவிக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழுவில் உள்ளோர் தான் இதனை உருவாக்கப்போகிறார்களா? நாடு கடந்த அரசினை உருவாக்கும் பணி எவ்வாறு நடைபெறும்?

நாடு நடந்த அரசாங்கம் இன்னும் உருவாகவில்லை. அதனை உருவாக்குவதற்கான செயற்குழு திரு விசுவநாதன் உருத்திரகுமாரன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்குழுவின் உறுப்பினர்களில் இதன் இணைப்பாளரான உருத்திரகுமாரனின் பெயர் மட்டும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு நடந்த அரசாங்கத்தினை உருவாக்குவதற்கான செயற்பாட்டுக் குழுவினை நாடுகள் சார்ந்து உருவாக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த செயற்பாட்டுக் குழுவில் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ளவர்களை தற்போது இணைத்து வருகிறோம். ஒவ்வொரு நாட்டிலும் அமைக்கப்படும் செயற்பாட்டுக் குழுவுக்குத் தலைமை தாங்குபவர்களை உள்ளடக்கிய ஒரு தலைமைச் செயற்பாட்டுக் குழுவும் அமைக்கப்படும்.

விரைவில் ஒவ்வொரு நாடுகளுக்கும் உரிய செயற்குழுவின் விபரங்களை வெளிப்படுத்துவோம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழு உருவாக்க செயற்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகள் தழுவிய செயற்பாட்டுக் குழுக்கள் தத்தமது நாடுகளில் தமிழ் அமைப்புக்களுடனும் தமிழ் மக்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இந்தத் திட்டத்திற்கு ஆதரவு திரட்டும்.

தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல தமது நாடுகளில் உள்ள சிவில் சமூகத்தின் (Civil Soceity) ஆதரவினையும் இந்த அரசாங்கத்தினை அமைக்கும் திட்டத்திற்குத் திரட்டும். தத்தமது நாடுகளின் அரசியல் தலைவர்களினதும் அரசாங்கத்தினதும் ஆதரவினை இந்த நாடு கடந்த அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்கு திரட்டும் செயற்பாடுகளிலும் இந்த செயற்குழு ஈடுபடும். ஆலோசனைக் குழுவும் முஸ்லிம், இந்திய கல்விமான்களையும் உள்வாங்கி விரிவுபடுத்தப்படும்.

ஓவ்வொரு நாடுகளிலும் வாழும் ஈழத் தழிழ் மக்களின் வாக்காளர் பட்டியல் தமிழர் மத்தியில் இயங்கும் மக்கள் அமைப்புக்களின் துணையுடன் நன்மதிப்புப் பெற்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் துணையுடன் அனைத்துலக நடைமுறைகளுக்கு அமைய சுயாதீனமான தேர்தல் குழு அமைக்கப்பட்டு தேர்தல்களை நடத்தி நாடு கடந்த அரசுக்கான மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்புடுவர்.

தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் தம்மை அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றி சட்ட சிறப்புக் குழுவினரின் உதவியுடன் மக்கள் அமைப்புகளின் ஆலோசனைகளை உள்வாங்கி நாடு கடந்த அரசாங்கம் தொடர்பான யாப்பினை தயாரிப்பார்கள்.

5. நாடு கடந்த அரசாங்கத்துக்கான முயற்சியினை புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் ஏன் முன்னெடுக்க வேண்டும்? நாட்டை விட்டு வெளியேறி வேறு தேசங்களில் குடியுரிமைகளினைப் பெற்றவர்களுக்கு ஈழத்தின் அரசியல் விடுதலையில் உள்ள பங்கு யாது?

நாடு கடந்த அரசியல் என்பது ஒரே நேரத்தில் பல தேசியங்களினைத் தன்னகத்தே கொண்டதாக இருக்கமுடியும்.

அதாவது, ஒருவர் ஒரே நேரத்தில் பிரித்தானியராகவும் தமிழராகவும் அல்லது கனடியராகவும் தமிழராகவும் இருக்கமுடியும். இது எங்கள் சமூகத்தின் பலமே தவிர பலவீனமல்ல.

இது ஈழத் தமிழர்களுக்கு வலுச் சேர்க்கின்ற விடயமாகவே கொள்ளப்படவேண்டும். 21 ஆம் நூற்றாண்டின் அரசியல் யதார்த்தம் நாடு கடந்த அரசியலாகவே பரிணாமம் பெற்று வருகின்றது.

புலம்பெயர்ந்து அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்து வருகின்ற ஐரிஷ் மக்கள், வட அயர்லாந்து மக்களின் போராட்டத்திற்கு உறுதியானதும் வெளிப்படையானதுமான ஆதரவினை வழங்கினார்கள்.

புலம்பெயர்ந்து வாழ்கின்ற யூத மக்கள் இந்த நாள் வரையும் இஸ்ரேல் தேசத்தினை அரசியல் ரீதியாகவும் பொருளியல் ரீதியாகவும் வலுப்படுத்தி வருகின்றனர். இன்னும் ஒரு தளத்தில் இத்தாலி, எல்சல்வடோர், எரித்திரியா, குரோசியா, மோல்டோவா போன்ற பல நாடுகள் புலம்பெயர்ந்து வாழும் மக்களினை தமது சொந்த நாட்டு அரசியலின் தவிர்க்கமுடியாக அங்கமாக மாற்றிவிட்டன.

இத்தாலிய நாடாளுமன்றத்துக்கு நான்கு உறுப்பினர்கள் புலம்பெயர்ந்த இத்தாலிய மக்களிடம் இருந்து தெரிவு செய்யப்படுகின்றார்கள்.

கெயிட்டியில் புலம்பெயர்ந்து வாழும் கெயிட்டி மக்களுக்காக ஒரு தனித் தேர்தல் தொகுதியே வழங்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் பாதிக்கு மேலானவை இரட்டைக் குடியுரிமையினை ஏற்றுக்கொண்டுள்ளன. இவை அனைத்தும் புதிய நூற்றாண்டில் நாடு கடந்த அரசியலுக்கு கிடைத்துள்ள முக்கியத்துவத்திற்கு சான்று பகல்கின்றன.

இந்தப் பின்னணியில்தான் ஈழத் தமிழர்களின் நாடு கடந்த அரசுக்கான முயற்சியினையும் நோக்கவேண்டும்.

இலங்கைத் தீவின் வடக்கு - கிழக்கு பிரதேங்களினை தமது பாரம்பரியத் தாயகமாக கொண்டு வாழ்ந்த தமிழ் மக்கள் சிறிலங்கா அரசினதும் சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளினதும் தொடர்ச்சியான தமிழின விரோத செயற்பாடுகள் காரணமாக தாயகத்தில் இருந்து சிதறடிக்கப்பட்டனர்.

தமிழர் தாயகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான அபிவிருத்திப் புறக்கணிப்புக்களும் இராணுவத்தின் துணைகொண்டு நிகழ்த்தப்பட்ட இன வன்செயல்களும் காரணமாக ஒருபகுதி மக்கள் வட கிழக்குக்கு வெளியே வாழ வழி தேடி குடிபெயர நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

மற்றுமொரு தொகுதியினர் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை வன்செயல்களில் இருந்த தங்களின் உயிரினைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தீவிற்கு வெளியே அகதிகளாக புலம்பெயர்ந்து குடிபெயர்ந்தனர்.
எஞ்சியிருந்தோர் போரினால் சிதைக்கப்பட்டு உள்ளூரில் அகதிகளாகவும், பொருளியல் வலுவற்ற அநாதைகளாகவும், அரசியல் அடிமைகளாகவும், சிறைக் கைதிகளாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

இலங்கைத்தீவுக்கு வெளியே வாழ்கின்ற ஈழத் தமிழர்களில் ஏறத்தாழ 90 வீதமானோர் 1972 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சிறிலங்காவின் குடியரசு அரசியல் அமைப்பின் காரணமாகவும் அதனைத் தொடர்ந்து இலங்கைத் தீவில் சிங்கள ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின விரோத செயற்பாடுகள் காரணமாகவும் தேசத்தினுள் சீவிக்கமுடியாது தமது சொந்த விருப்பத்திற்கு மாறாக வெளியேறியவர்கள்.

எனவே தாயக விடுதலை தொடர்பாக ஆகக்கூடிய அக்கறையுடன் போராடுவதற்கும் தாங்கள் தாயகத்தினை விட்டு வெளியேற்றப்படக் காரணமான காரணிகளினை உடைத்து எறிந்து செயற்படுவதற்கும் இவர்கள் உரித்துடையவர்கள்.

தாயகத்தில் ஈழத் தமிழர் தேசம் தனது சுயநிர்ணய உரிமையினை வென்று எடுப்பதற்கான பணிகளினை முன்னெடுப்பது புலம்பெயர் ஈழத் தமிழர்களின் உரிமையும் கடமையும் ஆகும்.
6. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எங்கே அமையும்? அத்தகைய அரசாங்கத்தின் தன்மை எவ்வாறு இருக்கும்? அதன் முதன்மையான பணிகள் யாவை?

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது ஓர் புதிய அரசியல் முயற்சியாகும்.

இலங்கைத் தீவுக்கு வெளியே புலம்பெயர்க்கப்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்களில் ஈழத் தமிழர்கள் அந்த நாடுகளின் குடியுரிமைகளினைப் பெற்றும் பெறாமலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் தாங்கள் வாழும் தேசங்களின் எல்லைகளினையும் தாண்டியதாக தங்களுக்குள் ஒரு ஈழத் தமிழ்த் தேசிய அடையாளத்தினைக் கொண்டிருப்பதும் தங்களது தாயகத்தின் அரசியல் விடுதலைக்கான வேட்கை கொண்டவர்களாக செயற்படுவதும் தொடர்ச்சியாக தாய்த் தேசத்தில் வாழும் உறவுகளுடனும் சமூகங்களுடனும் இறுக்கமான தொடர்பாடல்களினை பேணுவதும் இங்கு முக்கியமானது.

அமைக்கப்பட இருக்கும் தமிழீழ அரசாங்கம் ஏனைய முறைசார் அரசுகள் போல் ஒரு தேசத்தின் நிலப்பரப்பினை தளமாக கொண்டதாகவோ அல்லது சட்டம் இயற்றுதல், பாதுகாப்பு, வரி அறவிடல் போன்ற பாரம்பரிய அரசு செயற்பாடுகளினால் தனது இறையாண்மையினை நிலைநாட்ட முற்படுவதாகவோ இருக்கமாட்டாது.

ஆகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கி செயற்படுத்த ஒரு நிலப்பரப்போ தேசமோ அவசியம் அற்றது.

புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத் தமிழர்களின் தமிழ்த் தேசிய அடையாளம் என்கின்ற தளத்தின் மீது தாயகத்தின் தன்னாட்சி உரிமைக்காக போராடும் குறிக்கோளினால் ஒருங்கிணைக்கப்பட்டு கட்டி எழுப்பப்பட்டதாக இந்த அரசு இருக்கும்.

தாயகத்தில் வாழும் மக்களினது பாதுகாப்பு, விரிவுபடுத்தப்பட்டதும் விரைவுபடுத்தப்பட்டதுமான முழுமையான தன்னாட்சி உரிமைக்கான போராட்டம், சமூக பொருளாதார பண்பாட்டு செழுமை ஆகியவற்றினை தனது முதன்மைக் குறிக்கோளாக கொண்டு இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் செயற்படும்.

மேலும், புலம்பெயர் தேசங்களில் குடியேறிய ஈழத் தமிழர்கள், தாங்கள் வாழும் தேசங்களின் சட்டமுறைமைகளுக்கு இசைவாக தங்களினை ஒரு பலம் பொருந்திய சமூகமாக கட்டி எழுப்பவதற்கும் அதன் ஊடாக அந்தத் தேசங்களில் அவர்களால் அடையப்படக்கூடிய சமூக பொருளாதார அரசியல் மேனிலையினை தாயக விடுதலைக்கான உந்துசக்தியாக மாற்றும் உயரிய செயற்பாட்டினையும் இந்த அரசு முன்னெடுக்கும்.

உலகு எங்கும் பரந்து வாழும் தமிழ் மொழியினையும் தமிழ்ப் பண்பாட்டினை தமது வாழ்வாகக்கொண்ட எம்மவர்களின் சமூக பொருளாதார செழுமைக்கான ஆதரவுத்தளமாகவும் அவர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பினை ஈழத் தமிழரின் தாயக விடுதலைக்காக ஒருங்கிணைக்கும் அடித்தளமாகவும் இந்த அரசு செயற்படும்.

தற்போது முன்மொழியப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியினை தனது ஆட்புலமாக கொண்டிருக்காவிடினும் தனது குறிக்கோள்களினை நிறைவேற்றுவதற்கான செயலணிகளினையும் அதற்கான செயற்பாட்டு அலுவலகங்களினையும் பொருத்தமான முறையில் பல்வேறு தேசங்களில் அவற்றின் சட்டவரம்புகளுக்கு உட்பட்டு உருவாக்கிச் செயற்படுத்தும்.

7. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அனைத்துலக நாடுகள் அங்கீகரிக்குமா? அவைகளின் அங்கீகாரம் இன்றி இந்த செயல் திட்டத்தினை சிறப்பாக முன்னெடுக்க முடியுமா?

முன்னரே குறிப்பிட்டது போல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது ஒரு புதிய முயற்சியே ஆகும்.

இத்தகைய முயற்சிக்கான மாதிரிகள் இதுவரை உருவாக்கப்படவில்லை. கடந்த காலத்தில் அரசியல் விடுதலைக்காக போராடிய பல சமூகங்கள் தங்களது தேசத்துக்கு வெளியே புகலிட அரசாங்கங்களினை உருவாக்கி செயற்படுத்தி இருந்தனர்.

பல சந்தர்ப்பங்களில் உள்நாடுகளில் எழுந்த அமைதியற்ற சூழ்நிலைகள் காரணமாக தலைவர்கள் நாட்டுக்கு வெளியே தங்களது அரசாங்கங்களினை நகர்த்தி செயற்படுத்தியதும் பின்பு சுமூகமான சூழ்நிலையில் அந்த அரசுகளினை தேசத்தினுள் கொண்டு சென்று தொடர்ந்ததும் உண்டு.

அத்தகைய நிலைமைகளில் ஒரு தேசத்தின் ஆதரவும் அங்கீகாரமும் அத்தகைய புகலிட அரசாங்கங்களின் இருப்புக்கும் சிறப்பான செயற்பாட்டுக்கும் அவசியமானது.

முன்மொழியப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசு அத்தகைய தன்மைகளுக்கு உட்பட்டதல்ல. புகலிட அரசாங்கங்கள் இயங்குவதற்கு பலமான புலம்பெயர் சமூகம் அவசியமானதாக இருக்காது. ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசினைப் பொறுத்தவரை அதற்கு மிகவும் பலமான புலம்பெயர் சமூகமும் தெளிவான அரசியல் இலக்குகளும் உண்டு.

அதேவேளையில் ஆயுதப் போராட்டத்துக்குப் புறம்பாக ஈழத் தமிழர்களின் அரசியல் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கான அவசியத்தினை வலியுறுத்தும் அனைத்துலகங்களினதும் தோழமைச் சக்திகளினதும் தொடர்ச்சியான அறைகூவல்கள் மிக சாதகமான காரணிகளாகவும் உந்துசக்திகளாகவும் உள்ளன.

8. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றிய எண்ணக்கருவினை தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளர் திரு. செல்வராசா பத்மநாதன் அவர்களே முதலில் முன்வைத்தார். அப்படியாயின் இதனை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு வேலைத்திட்டமாக கொள்ள முடியுமா?

ஈழத் தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டம் கடந்த பல தசாப்தங்களாக பல்வேறு கட்டங்களினையும் அணுகுமுறை மாற்றங்களினையும் தாண்டி வந்துள்ளது.

இந்தக் காலகட்டத்திற்குள் அரசியல் கோரிக்கைகளின் வடிவங்கள் மேலும் துல்லியமானதும் தீர்க்கமானதுமான நிலைக்கு முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று போராட்ட முறைகளும் அதற்கான தலைமைத்துவங்களும் மாற்றம் பெற்றன.

இது வரலாற்றின் இயங்கியல் தன்மை ஈழத் தமிழர்களின் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் காணப்பட்டதனையே வெளிப்படுத்துகின்றது. அதன் தொடர்ச்சியாகவே தற்போதைய நிலைமையினையும் காணவேண்டியுள்ளது.

1980-களின் பின்னரைப் பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருமைப்படுத்தப்பட்ட தலைமையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் சிறிலங்காவினதும் அதன் நேச சக்திகளினதும் கூர்மைப்படுத்தப்பட்ட இராணுவ மேலாதிக்கத்தினால் பலவீனமாக்கப்பட்டது. இங்கு பலவீனமாக்கப்பட்டது ஒரு குறிப்பிட்ட போராட்ட வடிவமே தவிர விடுதலைப் போராட்டம் அல்ல.

'செப்ரம்பர் 11' என குறிப்பிடப்படும் துன்பியல் நிகழ்ச்சியினைத் தொடர்ந்து அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற கருத்துருவாக்கத்தினை மிக வெற்றிகரமாக கையாண்ட சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் உலகின் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களுக்கு முற்றிலும் புறம்பாக ஒரு போரினை ஈழத் தமிழர்கள் மீதும் அவர்களின் தாயகத்தின் மீதும் திணித்து 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் இனப்படுகொலையினை நிகழ்த்தி முடித்துள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் ஈழத் தமிழர்களின் தாயக விடுதலைக்கான போராட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான வரலாற்றுக்கடமை தமிழ் மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த முக்கியமான பங்களிப்பினை உரிய காலகட்டத்தில் உரியமுறையில் செல்வராசா பத்மநாதன் அவர்கள் முன்வைத்தார்.

இன்றைய சூழலில் மேல் எழும் புதிய உலக அரசியல் ஒழுங்குக்குள் அனைத்துலகங்களின் நலன்சார் அரசியல் வலைப்பின்னல்களுக்கு ஊடாக - பொருத்தமான புதிய அணுகுமுறைகளினைப் பயன்படுத்தி ஈழத் தமிழர்களின் தாயக விடுதலைக்கும் தன்னாட்சி உரிமைக்குமான போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டி உள்ளது. இது அனைத்துலக மட்டத்தில் புலம்பெயர் ஈழத் தமிழ்ச் சமூகத்தினால் பரந்த தளத்தில் கட்டி எழுப்பி முன்னெடுக்கப்படவேண்டும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான கருத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் முன்மொழிந்து அதனை தமிழ்ச்சமூகத்திடம் கையளித்ததன் மூலம் வரலாற்றின் இயங்கியல் போக்கில் தமக்குரிய கடமையினைச் செய்துள்ளனர். அதனைப் புரிந்துகொண்டு ஒரு தனித்துவமானதும் பொதுமைத்தன்மை கொண்டதும் ஈழத் தமிழர்கள் யாவரினையும் ஒன்றிணைத்து உள்ளீர்க்கக் கூடியதுமான அமைப்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமையும்.

இது மேல் இருந்து திணிக்கப்பட்ட ஒன்றாக இருக்காது. முற்றாக கீழ் இருந்து மேல் நோக்கி கட்டி எழுப்பப்படுகின்ற ஒரு ஜனநாயக அமைப்பாக இருக்கும்.

இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மிகவும் சிறப்பாகவும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் வடிவமைக்கப்படும் ஜனநாயகச் செயன்முறை ஊடாக பல தேசங்களிலும் பரந்து வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர்களினால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளினைக் கொண்டு செயற்படுத்தப்படும்.

இந்த அரசாங்கம் செயற்படவுள்ள முறைமை தொடர்பான மேலதிக விபரங்களை நாம் விரைவில் அறியத் தருவோம்.

9. சிறிலங்காவின் அரசும் சிங்கள பௌத்த தேசியவாதிகளும் இதனை எவ்வாறு நோக்குவார்கள்?

சிறிலங்கா அரசும் அதன் இனவெறி ஆட்சியாளர்களும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' வேலைத்திட்டத்தினை மிகவும் அச்ச உணர்வுடனும் ஆபத்தானதாகவுமே பார்க்கின்றனர்.

ஏனெனில் சிறிலங்கா அரசு தற்போது தாயகத் தமிழர்களின் மேலும் தாயகத்தின் மீதும் கொண்டுள்ள மேலாண்மை உண்மையான வெற்றியும் அல்ல. நிரந்தரமானதும் அல்ல. தாங்கள் கட்டி எழுப்பிய இராணுவ மேலாதிக்கத்தினால் அவர்கள் பெற்றுக்கொண்டது வலுச்சமனிலை மேலாதிக்கம் மட்டுமே. அதுவும் இலங்கைத் தீவுக்குள் மட்டுமே சாத்தியமானது.

அத்துடன், ஆயுதப் போராட்ட அணுகுமுறைக்கு மட்டுமே அவர்களின் இராணுவ மேலாதிக்கத்தினால் பதிலளிக்க முடியும்.

இத்தகைய நிலைமையில் தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமைக்கான விடுதலைப் போராட்டம் ஆயுதப் போர்முறைக்குப் புறம்பாக அனைத்துலக தளத்தில் கட்டி எழுப்பப்படுவதனை சிறிலங்கா ஆட்சியாளர்கள் தங்களால் எதிர்கொள்ள முடியாத விடயமாகவே அச்சத்துடன் பார்க்கின்றனர்.

எனவே தற்போது முன்மொழியப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற வேலைத்திட்டத்தினை வளரவிட்டால் அது தங்களால் என்றுமே வெற்றிகொள்ளப்படமுடியாத பலம் கொண்ட ஈழத் தமிழரின் போராட்ட வடிவமாக மாறிவிடும் என்று கருதுகின்றனர்.

இன்று சிறிலங்காவும் அதன் துனை சக்திகளும் தங்களின் வளர்ச்சியின் எல்லைக்குப் போய்விட்டனர். கடந்த கால அணுகுமுறைகளினை மீளவும் மீளவும் செயற்படுத்துவதனைத் தவிர வேறுவழி அவர்களுக்கு இல்லை.

சிறிலங்கா தான் வெற்றி பெறக்கூடிய களத்திற்குள் ஈழத் தமிழரின் போராட்ட வடிவத்தினையும் மட்டுப்படுத்தவே முயற்சிக்கின்றது. களத்தின் விளையாட்டு விதிகளினை தீர்மானிக்கும் கட்டுப்பாட்டினை தனக்குள் வைத்திருக்கவே முயல்கின்றது.

முன்மொழியப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் செயற்பாடு ஈழத் தமிழர்களினால் திறக்கப்படும் புதிய ஆடுகளமாகும். இதன் விதிகளினை சிறிலங்காவால் தீர்மானிக்கமுடியாது. அதன் இராணுவ மேலாதிக்கமும் ஆள்புலக் கட்டுப்பாடும் இங்கு செல்லுபடி அற்றது. முடிந்தால் சில உதிரியான தனிமனித அச்சுறுத்தல்களினை மட்டுமே சிறிலங்காவின் ஆட்சியாளர்களினாலும் அதன் துணைச் சக்திகளினாலும் ஏற்படுத்தமுடியும்.
10. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது தற்போது இயங்கிவரும் பல்வேறு புலம்பெயர் ஈழத் தமிழர்களின் அமைப்புக்களினைப் போன்ற ஒன்றுதானா? அல்லது தனித்துவம் கொண்டதா? அவ்வாறு தனித்துவம் கொண்டதாயின் அது எவ்வாறு தற்போது இயங்குகின்ற நிறுவனங்களுடனும் கட்டமைப்புக்களுடனும் உறவுகளினைப் பேணும்?

நடைமுறையில் பல்வேறு சமூக நிறுவனங்களும் தன்னார்வ அமைப்புக்களும் புலம்பெயர் ஈழத் தமிழர்களினால் உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

அவை செயற்பாட்டளவிலும் பங்கேற்பாளர்களினைப் பொறுத்தும் தமக்குள் ஒத்த தன்மைகளினையும் தனித்தன்மைகளினையும் கொண்டுள்ளன. அவற்றின் செயற்பாடுகளின் முக்கியத்துவத்துவத்தினையும் செயற்படு ஆற்றலினையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

எனினும் தற்போது தமிழ்ச் சமூகம் எதிர்கொண்டுள்ள தேசிய மற்றும் அனைத்துலக அளவிலான சவால்களினை எதிர்கொள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அவசியமானது.

முன்மொழியப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கும் சவால்களினை எதிர்கொள்ளக்கூடிய வகையில் ஈழத் தமிழ்மக்கள் சார்பாக புலம்பெயர் ஈழத் தமிழர்களின் மக்கள் ஆணைபெற்ற அதிஉயர் அரசியல் பீடமாக அனைத்துலக மட்டத்தில் அமைக்கப்படும்.

புலம்பெயர் தேசத்து ஈழத் தமிழர்கள் மத்தியில் முன்னெடுக்கப்படும் ஜனநாயக நடைமுறை ஊடாக மக்கள் நேரடியாக தமது வாக்குகளினைப் பிரயோகித்து பிரதிநிதிகளினைத் தெரிவு செய்வர்.

அந்தப் பிரதிநிதிகள் ஒன்றாகக் கூடி அரசியலமைப்பு நிர்ணய சபையாக செயற்பட்டு எதிர்கால செயற்பாடுகளுக்கான சட்டகத்தினை உருவாக்குவர்.

அவ்வாறு அவர்கள் செயற்படும்போதும் 1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டை தீர்மானமும் 1977 ஆம் ஆண்டில் தமிழ்மக்கள் அதற்கு வழங்கிய மக்கள் ஆணையும் 1985 ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய திம்புக் கோட்பாடுகளும் அடிப்படை நெறிப்படுத்தல் நியமங்களாக அமையும்.

இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனக்கான பிரதிநிதிகளினை நேரடியாக தெரிவு செய்வதன் மூலம் தான் மக்கள் ஆணையினை பெற்றுள்ளதனை உலகுக்கு பிரகடனப்படுத்தும் அதேவேளை ஒவ்வோர் தேசங்களிலும் செயற்படும் மக்கள் சார்ந்த கட்டமைப்புக்களினை தன்னுடன் ஒன்றிணைப்பதன் ஊடாக வினைத்திறனுடனும் விளைதிறனுடனும் தனது செயற்றிட்டங்களினை கையாள்வதற்கான வலையமைப்பினையும் பங்காளி உரித்தாண்மையினையும் கட்டி எழுப்பும்.

இவ்வாறு மக்கள் ஆணை கொண்ட, ஈழத் தமிழர் தேசத்தின் அதிஉயர் அரசியல் பீடமாகத் தன்னை நிலைநிறுத்தும் நாடு கடந்த தமிழீழ அரசு, புலம்பெயர்ந்த தமிழ் மக்களின மத்தியில் இயங்கும் மக்கள் அமைப்புக்களைத் தன்னுடன் இணைத்துப் பணியாற்றும். இந்த இணைவு எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பான கலந்துரையாடல்களினை நாம் தற்போது மேற்கொண்டு வருகிறோம்.

இந்தக் கலந்துரையால்களுக்கு ஊடாக பொருத்தமான இணைவு வடிவம் கண்டறியப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

11. நாடு கடந்த தமிழீழ அரசு முன்னெடுக்கும் தீர்மானங்களும் செயற்பாடுகளும் இலங்கைத்தீவினுள் வாழும் தமிழ்மக்களின் அரசியல், சமூகம், பொருண்மியம், பாதுகாப்பு, புனர்வாழ்வு - புனரமைப்பு - மீள்குடியேற்றம் ஆகிய விடயங்களில் எத்தகைய சாதக பாதகவிளைவுகளினை ஏற்படுத்தும்?

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது முதன்மையான குறிக்கோளாக ஈழத் தமிழரின் தன்னாட்சிக்கான போராட்டத்தினை கொண்டிருக்கும் அதேவேளையில் இரட்டை முனைகளினைக்கொண்ட அணுகுமுறையினை முன்னெடுக்கும்.

ஒன்று சிறிலங்காவின் ஆட்சியாளர்களினால் அங்கு வாழும் தமிழ் மக்களின் மீது நிகழ்த்தப்படும் அநீதிகளினையும் புறக்கணிப்புக்களினையும் பழிவாங்கல்களினையும் கட்டுப்படுத்துவதற்கு வேண்டிய மாற்று முயற்சிகளினை அனைத்துலக மட்டத்தில் இராஜதந்திர ரீதியாக முன்னெடுத்தல். மற்றையது புலம்பெயர் தமிழர்களின் ஆற்றல்களினையும் வளங்களினையும் ஒன்றுதிரட்டி வழிப்படுத்துவதன் மூலம் தாயகத்தின் வளங்களினையும் வாய்ப்புக்களினையும் சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகள் சூறையாடுவதனையும் உரித்துக்கொண்டாடுவதனையும் தடுத்து நிறுத்தி தமிழர்பால் தக்கவைத்தல்.

இங்கு குறிப்பிட்ட நோக்கங்களினை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காகவும் இலங்கைத் தீவிற்குள் வாழும் தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கும் உள்ளூர் வளங்கள் மீது அவர்களுக்குள்ள உரிமையினைத் தக்கவைப்பதற்காகவுமான பொருத்தமான மாற்று ஒழுங்குகளினையும் உப நிறுவனங்களினையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டறிந்து உருவாக்கி நெறிப்படுத்தும், அல்லது ஏற்கனவே இருக்கக்கூடிய நிறுவனங்களினை பொருத்தமான முறையில் உள்வாங்கும்.

தேவையான நிலைமைகளில் அனைத்துலக உதவி வழங்கும் நிறுவனங்கள், நன்கொடை அமைப்புக்கள், இருதரப்பு மற்றும் பல்தரப்பு அபிவிருத்தி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் உறவுகளினை ஏற்படுத்தி தாயகத்தின் நல்லாட்சி, மீள்குடியேற்றம், அபிவிருத்தியும் முதலீடும், நிறுவனமயமாக்கம், மனிதவள மேம்பாடு, சூழல் நல்லாட்சி என்பவை தொடர்பாக விவாதித்து அவர்களின் பங்களிப்பினை தமிழ் மக்களின் முழுமையான நிறைவுக்காக வழிப்படுத்தும்.

இலங்கைத் தீவிற்குள் தமிழ் மக்களின் தேசியத்துடன் இணைந்த அரசியல் குறிக்கோள்களுக்காக செயற்படும் அமைப்புக்களுக்கு பொருத்தமான உள்ளீடுகளினை வழங்குவதன் ஊடாக அவர்களினை வலுவூட்டி அவர்களின் செயற்பாடுகளினை முன்நோக்கி நகர்த்தும்.

12. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எத்தகைய தலைமைத்துவத்தினை வழங்கும்? நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமைத்துவம் அவர்களுக்கு தேவைதானா? அவர்கள் தற்போது அடைந்துள்ள சமூக பொருளாதார மேனிலை போதாதா?

மேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்க கண்டத்திலும், அவுஸ்திரேலிய கண்ட நாடுகளிலும் வாழ்கின்ற புலம்பெயர் சமூகங்களினை ஒப்புநோக்கும்போது ஈழத் தமிழர்கள் வெற்றிகரமான சமூகங்களில் ஒன்றாகவே கணிக்கப்படுகின்றார்கள். அவர்களது கடின உழைப்பும், கல்வி அறிவும், தொழிலாற்றலும், நிறுவன விசுவாசமும் கீழ்ப்படிதலும் சிக்கனமான வாழ்க்கை முறையும் சொத்து உடமையும், கூட்டு வாழ்க்கையும் தாயக உறவுகளின் மீது கொண்டுள்ள பற்றும் பாசமும் மிகவும் வியந்து பாராட்டப்படுகின்றது.

எனினும் போரினாலும் இன வன்செயல்களினாலும் சிதைக்கப்பட்டு தேசத்தில் இருந்து சிதறடிக்கப்பட்ட ஒரு சமூகத்திற்கு குறிப்பாக விடுதலைக்காக போராடும் இனத்திற்கு இவை மட்டும் போதுமானவை அல்ல.

அரை நூற்றாண்டுக்கு மேல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இன வன்செயல்களாலும் பொருளாதார புறக்கணிப்புக்களாலும் மீண்டும் மீண்டும் தறிக்கப்பட்ட தமிழ்ச் சமூகம் தனது சுய ஆற்றல்களினாலேயே மீளவும் முளைவிட்டு எழுந்தது. ஆனாலும் இந்த சமூகம் தனது வளர்ச்சியினை ஒரு வரையறைக்குள் முடக்கிக்கொண்டுள்ளதாகவே அவதானிக்கப்படுகின்றது.

கல்வியறிவில் ஒப்பீட்டளவில் உயர் வீதத்தினை கொண்டிருந்தாலும் இந்த சமூகம் உயர் தீர்மானம் எடுக்கும் கட்டளைப் பீடங்களில் பெற்றிருக்கக்கூடிய பங்கு மிகமிக குறைவாகவே உள்ளது.

அதேபோன்று கூடிய சேமிப்பு ஆற்றலினைக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ்ச் சமூகம் தொழிற்பாடு மூலதன உருவாக்கத்தில் மிகப்பலவீனமாகவே காணப்படுகின்றது.

தொழில் வினையாற்றலில் சிறப்பு தன்மைகளினைக் கொண்டிருந்தும் தொழிலாண்மையிலும் தொழில் வாய்ப்புக்களினை உருவாக்குவதிலும் போதிய அக்கறையற்ற நிலைமையே அவதானிக்கப்படுகின்றது.

இன வன்செயல்களினால் தோற்றுவிக்கப்பட்ட உயிர் ஆபத்துக்களினையும் அபாயங்களினையும் துணிகரமாக எதிர்கொண்டு தம்மை தக்கவைத்துள்ள ஈழத் தமிழர்கள், திறந்த சந்தைப் பொருளாதாரத்தினை எதிர்கொள்வதற்கு முன்வரத் தயங்குபவர்களாகவே உள்ளனர்.

போரின்போது இழக்கப்பட்ட வாய்ப்புக்களினை மீளவும் விரைவாக கட்டி எழுப்புவதற்கு உரிய வங்கிகள், மனிதவள மேம்பாட்டு நிறுவனங்கள், தொழில் பயிற்சி மையங்கள், சேவை நிலையங்கள் ஆகியவற்றினைக் கூட சொந்தமாக கட்டி எழுப்ப முன்வராமல் ஏற்கனவே இருக்கும் அதிகாரத்தின் கீழான கட்டமைப்புக்களிலே தங்கி வாழும் சமூகமாக உள்ளனர். இவைகள் யாவும் மாற்றப்பட வேண்டும்.

ஈழத் தமிழர்களின் மேனிலை என்பது அனைத்துலகத்தின் சகல பரப்புக்களிலும் கட்டி எழுப்பப்பட வேண்டும் வாழும் தேசங்களின் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தக்கூடியளவான மூலதனவாக்கத்திலும் தொழிலாண்மையிலும் ஈழத் தமிழர்களின் பங்கு அதிகரிக்கப்படவேண்டும்.

தேசங்களின் தீர்மானம் எடுக்கும் உயர்கட்டளைப் பீடங்களின் தவிர்க்கமுடியாத அங்கமாக ஈழத் தமிழர்களின் அறிவாற்றலும் நிபுணத்துவமும் விரிவுபடுத்தப்படவேண்டும். அனைத்துலக நிறுவனங்களின் உயர்பீடங்களில் ஈழத் தமிழர்களின் ஆளுமை பிரதிபலிக்கவேண்டும். அதன் மூலம்தான் ஈழத் தமிழர்களின் தாயக விடுதலைக்கான பயணம் விரிவுபடுத்தப்பட்டதாகவும் விரைவுபடுத்தப்பட்டதாகவும் அமையும்.

இதற்கு தேவையான மூலோபாய - தந்திரோபாய ரீதியான தலைமைத்துவத்தினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வழங்கும்.

13. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பது தொடர்பான பணிகள் எந்தளவில் உள்ளன? அரசாங்கத்தின் வடிவமும் ஏனைய விடயங்களும் இறுதியாக தீர்மானிக்கப்பட்டு விட்டனவா? உத்தேசிக்கப்பட்ட கால அட்டவணைகள் தாயகத்தின் மனிதநேய நெருக்கடிகளுடன் ஒப்பிடும்போது காலநீட்டம் கொண்டவையாக கருதமுடியாதா?

'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' என்ற செயல் திட்டம் ஒரு புத்தாக்க முயற்சியாகும். அதேவேளையில் அதுபற்றிய போதிய கலந்துரையாடல்களினையும் விவாதங்களினையும் மக்கள் மத்தியிலும் பொருத்தமான துறைசார் நிபுணர்கள் மத்தியிலும் உருவாக்காமல் இந்தத் திட்டத்தினை முன்னெடுப்பது இந்த முயற்சியின் அடிப்படைகளினையே மறுப்பதாக அமையும்.

தேசத்தில் நிலவும் மனிதநேய அவலங்கள் தொடர்பில் விரைந்து செயற்படவேண்டிய தேவை உணரப்பட்டாலும் ஈழத் தமிழரின் தேசிய விடுதலைக்கான புலம்பெயர் சமூகத்தின் அதி உயர்பீடத்தினை உருவாக்குவதில் நியாயமான கால அவகாசம் கொண்டிருப்பது மிக முக்கியமானது.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான விவாதங்களாகவே அமைந்துள்ளன.

இந்த விவாதங்கள் ஊடாக ஓரளவுக்கு சிறப்பான முடிவுகளினை உருவாக்கக்கூடிய ஆலோசனைகள் கிடைத்துள்ளன.

இந்த ஆலோசனைகள் யாவற்றையும் கவனத்தில் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான உருவாக்க குழுவும் நிபுணத்துவ ஆலோசனைக் குழுவும் கலந்தாலோசித்து தயாரிக்கப்படும் திட்ட விபரங்கள் மக்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்படும்.

முன்மொழியப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான செயற்பாடுகள் பல கட்டங்களாக முன்னெடுக்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்டு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலுவைப் படிமுறை கீழே தரப்படுகிறது.

1 ஆம் நிலை: கருத்துருவாக்கம்.

2 ஆம் நிலை: நிபுணத்துவ ஆலோசனைக் குழுவினை அமைத்தல்.

3 ஆம் நிலை: பரந்த தளத்தில் நாடுகள் தழுவியதாக கலந்துரையாடல்களினை உருவாக்குதலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவதற்கான குழுவினை நாடுகள் சார்ந்ததாக தெரிவு செய்தலும்.

4 ஆம் நிலை: முன்மொழியப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடிப்படை வடிவத்தினை வரையறை செய்தலும் பிரதிநிதிகளினை தெரிவு செய்வதற்கான தேர்தல் செயன்முறையினை வடிவமைத்து முன்னெடுத்தலும்.

5 ஆம் நிலை: தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளினைக் கொண்டதான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்புச் சபையினை கூட்டுதலும் யாப்பினை உருவாக்கி அங்கீகரித்தலும் அதனை நிறைவேற்றுவதற்கான அரசியல் கட்டளைப் பீடத்தினை அங்குரார்ப்பணம் செய்தலும்.

6 ஆம் நிலை: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை செயற்பாட்டுக்கு கொண்டு வருதல்.

மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளில் தற்போது 3 ஆம் நிலைச் செயற்பாடுகள் தொடர்கின்றன.

14. நாடு கடந்த அரசாங்கத்துக்கான தேர்தல் எப்போது நடைபெறும்?

தமிழர் வாழும் ஒவ்வொரு நாடுகளிலும் இந்த தேர்தல்களை ஏப்ரல் மாதம் 2010 ஆம் ஆண்டுக்குள் நடத்தி முடிப்பதற்கு தற்போது திட்டமிடப்படுகிறது.

இது குறித்த மேலதிக தகவல்களை நாம் விரைவில் அறியத் தருவோம்.

15. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் செயற்குழுவில் இணைந்து பணியாற்றுவதற்கான தகுதிகள் எவை? எவ்வாறு இணைவது?

இந்தக் குழுவில் இணைய விரும்புவர்கள் 18 வயதினை நிறைவு செய்தவர்களாக இருக்க வேண்டும்.

இலங்கைத்தீவில் ஈழத் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை என்ற கோட்பாடுகளின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

ஓவ்வொரு நாடுகளுக்கும் குழுக்களுக்கு தலைமை தாங்குபவர் பெயரினையும் அவரது தொடர்பு விபரங்களையும் விரைவில் அறியத் தருவோம்.

அவர்களுடன் தொடர்பு கொண்டு நீங்கள் இந்தக் குழுவில் இணைந்து கொள்ளலாம். இதனை விட எமது மின்னஞ்சல் முகவரியுடன் மூலமும் தொடர்பு கொண்டும் இணைந்து கொள்ளலாம்.


Saturday, April 17, 2010

பாகிஸ்தான் சிறுவனுக்கு உதவி செய்த இந்தியா பிரபாகரன் தாயாருக்கு மறுத்தது ஏன்?சீமான் ஆவேசம்

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்திற்குள் நுழைய அனுமதி இல்லயென்று சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.




இது குறித்து நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான், ‘’தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாய் பார்வதி அம்மாள் தனது உடல் நலம் குன்றியதால் சிகிச்சை பெறுவதற்காக முறைப்படி விசா பெற்று இந்தியாவிற்கு வந்தவரை கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் ஈவிரக்கமின்றி மத்திய மாநில அரசுகள் திருப்பி அனுப்பியுள்ளது.



உரிய அனுமதி பெற்று வந்த ஒருவரை தடுத்த இது மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல சட்ட விரோத செயலுமாகும்.



பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிறுவனுக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய இந்தியா உதவியது என்று புகைப்படம் எடுத்து உலகுக்கு தங்கள் மனிதாபிமானத்தை வெளிச்சமிட்டுக்காட்டுபவர்கள் இதில் இரட்டை வேடம் இடுவது ஏன்?



யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகுக்கெல்லாம் பாடிச்சென்ற எம் பாட்டன் வாழ்ந்த மண்னில் இன்று இந்த மண்ணிற்குத் தொடர்பில்லாத இத்தாலியர் தொடங்கி மார்வாடி குஜராத்தி,மலையாளி,தெலுங்கர்கள் வரை அனைவரும் உல்லாச வாழ்வு வாழ்கையிலும் அதிகாரத்தில் இருக்கையிலும் எங்கள் அன்னையின் உடல் நலத்திற்கு சிகிச்சை பெற இந்த மண்ணில் அனுமதி மறுக்கப்படுகின்றது என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடான ஒன்று?



உலகெமெல்லாம் வாழும் தமிழரின் ஒப்பற்ற தலைவனாம் எங்கள் அண்ணன் பிரபாகரனின் தாயாரை மனிதாபிமானமற்று திருப்பி அனுப்பியதன் மூலம் மத்திய மாநில அரசுகள் தமிழருக்கு எதிரான தங்கள் செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கின்றன என்று மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.



இந்த மனிதாபிமானமற்ற சட்ட விரோத செயலுக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்’’என்று தெரிவித்துள்ளார்.

Sunday, March 28, 2010

அறிஞர் அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம்!

கருணாநிதிக்கு “அண்ணா விருது“ வழங்கப்படுவதையொட்டி, அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம்.

அன்புள்ள தம்பி,

செப்டம்பர் 26ம் நாள், என் பெயரில் உனக்கு விருது வழங்கப்படுவதாக செய்தியறிந்தேன். இந்த நேரத்தில், இவ்விருது உனக்கு தகுதியானதுதானா என்ற
எண்ணம் என் மனதில் உதிப்பதை உதாசீனப்படுத்த இயலவில்லை..

தம்பி தம்பி என்று வாயார உன்னை நானழைத்தபோதெல்லாம், இத்தம்பி, எனது
கொள்கைகளையும்,லட்சியங்களையும், தரணியெல்லாம், எடுத்துச் செல்வான்,
தமிழ்கூறும் நல்லுலகின் புகழ் பரப்புவான் என்றெண்ணியதுண்டு. ஆனால், தமிழ்கூறும் நல்லுலகம் உன் குடும்பம் மட்டுமே என கருதுவாய் என நான் கனவிலும்
நினைக்கவில்லை.

வடக்கு வாழ்கிறது,தெற்கு தேய்கிறது என்று நான் சொன்னதை, உன் குடும்பம் மந்திரி
பதவிகளைப் பெற்றதும் “வடக்கு வழங்குகிறது, தெற்கு செழிக்கிறது“என்று நீ மாற்றிவிட்டாய். எந்த காங்கிரஸ் கட்சியை நாம் ஒழித்து, அழித்து, பூண்டோடு அற்றுப்
போகச் செய்யவேண்டும் என்று நாம் பாடுபட்டு 67ல் ஆட்சிக்கு வந்தோமோ, அதே காங்கிரஸ் கட்சியின் தலைவியை “தியாகத் திருவிளக்கு“ என்று பட்டமளித்து,
பிணமாயிருந்த காங்கிரஸ் கட்சிக்கு உயிரூட்டி, அழகு பார்க்கிறாய்.

வரலாறை திரும்பிப் பார் தம்பி ! என் மறைவுக்குப் பின், என் உயிரினும் மேலான அன்பு இளவல் “நாவலர்“ நெடுஞ்செழியன் முதல்வராக பதவிக்கு தேர்ந்தெடுக்கப்
பட்டிருக்க வேண்டும். ஆனால், மலையாள மன்னவனும் மக்களை வென்றவனுமான
எம்ஜிஆரின் உதவியுடன், நாவலரைத் தோற்கடித்து, நீ முதல்வர் பதவியை
நயவஞ்சகமாக பிடித்ததை நான் அறிவேன்.

ஆட்சியைப் பிடித்தவுடன், எந்த எம்ஜிஆரால் நீ பதவிக்கு வந்தாயோ, அதே எம்ஜிஆரை கட்சியை விட்டு நீ நீக்கியதையும், அதற்காக தமிழக மக்கள் உன்னை 13 ஆண்டுகள்
தண்டித்ததையும் வரலாறு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

67ல் ஆட்சிக்கு வரும் வரையில், பல போராட்டங்களை நடத்தியும், சினிமாவுக்கு வசனம் எழுதியும், ஆனால், நான் தொடங்கி வைத்ததை இத்தனை ஆண்டுகள் நீ
திறம்பட நடத்துவாய் என நான் எதிர்ப்பார்க்க வில்லை.

எனது ஆட்சியில் “பொதுப் பணித்துறை“ அமைச்சராக நீ இருந்தபொழுது, “பொதுப்பணியை“ கவனிக்காமல், “கலைப்பணி“ யில் ஈடுபட்டு, “காகிதப்பூ“
கதாநாயகியை கர்ப்பிணியாக்கி நான் சொன்னதால், இரண்டாவதாக மணம் புரிந்ததையும் நான் அறிவேன்.

பெரியார் பாசறையிலே என்னோடு சேர்ந்து நீயும் பயின்றவன் என்பதால், ஓரளவாவது பகுத்தறிவோடு இருப்பாய் என எதிர்ப்பார்தேன். ஆனால், மதவாத
பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்து, பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு மகுடம் சூட்டுவதில், பக்கத் துணையாய் இருப்பாய் என்பதை யார்தான் எதிர்ப்பார்த்திருப்பார் ?


சோதிடத்தில் நம்பிக்கை கொண்டு, அதனால் மஞ்சள் துண்டு அணிந்து, “மஞ்சள்
துண்டு மடாதிபதி“யாய் மாறிய உன்னை பெரியார் மன்னிக்க மாட்டார்.

“ஒன்றே குலம், ஒருவனே தேவன்“ என்று நான் சமரசம் செய்தால், உன் அமைச்சர்களை தீ மிதிக்கும் அளவுக்கு வளர்த்துவிட்டுள்ளாய்.

இக்கட்சியை உருவாக்கியதில், மிக முக்கிய பங்குவகித்தவர்கள் எல்லாரும், இப்போது மறைந்து போய், அவர்களின் குடும்பங்கள் வறிய நிலையில் வாடிக்கொண்டிருக்கையில், உன் குடும்பம், உலகசெல்வந்தர்கள் வரிசையில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருப்பது, காலத்தின் கோலமே !

மற்ற எல்லாவற்றையும் கூட மன்னித்து விடலாம் தம்பி.... இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில்,நீ ஆடிய நாடகமும், லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்து
கொண்டிருக்கையில்,பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக, காங்கிரஸ் காலில்
விழுந்து கிடந்ததை நான் மன்னித்தாலும் காலம் மன்னிக்காது. “தமிழர்களை
காப்பாற்றுங்கள் தாயே“ என்று அழுது நடித்த நாடகம் தமிழர்களிடத்தில் எடுபடவில்லை. இத்தனை தமிழர்களின் உயிர் போனதற்கு நீதான் காரணம் என்று வரலாறு உன் பெயரை பதிவு செய்யும்.

ஆகையால், என் பெயரால், உனக்கு வழங்கப் படும் விருதுக்கு நீ எள் முனையளவும் தகுதி படைத்தவன் கிடையாது.
அண்ணா..

ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும், இந்தியா இலங்கைக்கு ஆயுத உதவி செய்ததற்கும் கருணாநிதியின் ஆலோசனைதான் காரணம்: பழ.நெடுமாறன்

தமிழர் தேசிய இயக்கத்தலைவர் திரு.பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய மூன்றாவது அணி மக்கள் தயார் கட்சிகள் தயாரா? என்ற நூலின் வெளியீட்டுவிழா ஞாயிறு 28-3-10 அன்று மாலை மதுரையில் நடைபெற்றது. மதுரை மாமன்ற முன்னாள் உறுப்பினர் திரு.எம்.ஆர.மாணிக்கம் தலைமையில், திரு.ச.பிச்சை கணபதி வரவேற்க, மதுரை காமராசர் பலகலைக்கழக பொருளாதார பிரிவு முன்னாள் தலைவர் திரு.கு.வேலன் நூலை வெளியிட மணியம்மையார் மழலையர் பள்ளி தாளாளர் திரு.வரதராசன் பெற்றுக்கொண்டார். ”மண்மொழி” ராசேந்திர சோழன் நூலாய்வு செய்தார். மருத்துவர் போ.மு.செல்வம், சி.சி.சாமி, கா.பரந்தாமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இறுதியில் நூலாசிரியர் திரு.பழ.நெடுமாறன் ஏற்புரை ஆற்றினார். அவர் பேசும்போது, ”திராவிட இயக்க ஆட்சிகள் மத்திய அரசில் அங்கம் வகிக்கத் தொடங்கிய பின்னர்தான் தமிழகத்தின், தமிழினத்தின் வீழ்ச்சி தொடங்கியது. இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது திராவிடக்கட்சிகள் மத்தியில் அங்கம் வகிக்காத போதுதான், இந்தியாவில் விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி மற்றும் ஆயுத உதவிகள் உட்பட எல்லா உதவிகளும் செய்யப்பட்டன. 1969ல திமுக, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக குடியரசுத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சஞ்சீவ் ரெட்டிக்கு எதிராக, இந்திராகாந்தியின் பேச்சைக்கேட்டுக்கொண்டு வி.வி.கிரிக்கு ஆதரவளித்து வெற்றி பெறச்செய்தது ஒரு அரசியல் தவறாகும். காங்கிரசை எதிர்த்து அரசியல் செய்து ஆட்சிக்கு வந்த திமுக,காங்கிரசுடன் அரசியல் உறவு கொண்டது பெரும்தவறு. அதே காங்கிரஸ் கட்சி திமுக ஆட்சியை கலைத்தது. நெருக்கடிகாலத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மிசாவில் கைதாகி அவதிப்பட்டனர்.
பின்னர் அதே காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்துகொண்டு “நேருவின் மகளே வருக!நிலையான ஆட்சி தருக!”என்றுகூறி தவறுசெய்தது.மத்தியில் ஆளும் கட்சிகளுக்கு பல்லக்குத்தூக்க திராவிடக்கட்சிகள் போட்டிபோடுவது இன்றுவரை தொடர்கிறது.மத்தியில் அங்கம  வகித்ததினால்,தமிழக உரிமைப்பிரச்சனைகள் கொஞ்சமாவது குறைந்துள்ளதா?முலைப்பெரியாறு, காவிரி, பாலாறு, ஒகேனக்கல், சேது சமுத்திரம் போன்ற பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லையே? தங்களை மட்டுமே வளர்த்துக்கொள்ள மத்திய அரசில் அங்கம  வகித்துள்ளன. இப்போது பணபலத்தை நம்பி ஆட்சியில் அமரமுடியும் எனக்கருதி, தமிழகத்தின் இயற்கை வளங்களை அழித்து, கட்சிக்கும் குடும்பத்துக்கும் சொத்துக்களைச்சேர்க்கின்றன.
மணல், மலை, காடுகள், கனிம வளங்கள், ஏரிகள், கண்மாய்கள், கடற்கரைப்பரப்பு என அனைத்து வளங்களும் சூறையாடப்படுகின்றன. திராவிடக்கட்சிகளின் நாற்பது ஆண்டுகாலத்தில் தமிழ்நாட்டுக்கும், தமிழினத்துக்கும் கேடுதான்  அதிகம். தமிழகமுதல்வரிடம் ஆலோசனை கேட்டுத்தான், மத்திய அரசு எதையும் செய்யும் என சமீபத்தில் புதிய சட்டமன்ற கட்டிடத்தை திறந்துவைத்த பிரதமர் மன்மோகன் சிங் கூறியதிலிருந்து, இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும், இந்தியா இலங்கைக்கு ஆயுத உதவி செய்ததற்கும் கருணாநிதியின் ஆலோசனைதான் காரணம் என்பது அப்பட்டமான உண்மை. எனவே பிரச்சனைகளின் அடிப்படையில் மக்கள் போராட தயாராகவேண்டும்.அப்போது அரசு பயப்படும் என்பதற்கு, மதுரை யானைமலை பிரச்சனையில் அரசு பின்வாங்கியது உதாரணம். திராவிடக்கட்சிகளான, திமுக-அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக புதிய அரசியல் சக்தியை மக்கள் துணையுடன் உருவாக்க வேண்டியதற்கான ஆயத்த நூல்தான் இது” என்று கூறினார்.

Saturday, March 6, 2010

உலகப் பந்தில் தமிழீழம்


நாம் எவ்வளவு தியாகங்கள் செய்கிறோம் என்பது அல்ல முக்கியம். அத் தியாகங்கள் யாருக்கு சேவை செய்கின்றன என்பதுதான் முக்கியம்’

1980 களின் பிற்பகுதியில் கைக்குக் கிடைத்த புத்தகம் ஒன்றின் முன்னுரையில் இவ்வாக்கியங்களைப் படித்த ஞாபகம். இது ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய புத்தகமாக இருக்க வேண்டும்.

1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 29ம் நாள் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இந்திய இராணுவம் அமைதி காக்கும் படை எனும் பெயரில் தமிழீழ மண்ணில் நிலை கொண்டிருந்த காலத்தில்தான் இந்தப் புத்தகம் வெளியாகியிருந்தது.

நாம் செய்யும் தியாகங்கள் எமக்குச் சேவை செய்ய வேண்டும். அவை அந்நிய சக்திகளின் நலன்களுக்கு சேவை செய்பவையாக அமைந்து விடக்கூடாது என இம் முன்னுரை சுட்டி நின்றது.

எமது தியாகங்கள் எமக்குரிய சேவையினைப் புரிந்தவாறு ஏனையோருக்கும் சேவை புரியுமாயின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனப் பரந்த மனப்பான்மையுடன் இதனை ஏற்றுக் கொள்ளும் பண்பு தமிழர் சமூகத்திடம் உண்டு.

ஆனால் எமது அளப்பரிய தியாகங்கள் ஏனைய சக்திகளின் நலன்கள் என்ற பூதத்தினால் விழுங்கப்படுமாயின் அதனை எவ்வாறுதான் சகித்துக் கொள்ள முடியும்?

இதேசமயம், பூதம் விழுங்குவதற்கு வாய்ப்புக்களைக் கொடுத்து விட்டு, விழுங்கிய பூதத்தின் வாய்க்குள்ளோ, வயிற்றுக்குள்ளோ நின்று ‘ஐயோ! எம்மைப் பூதம் விழுங்கி விட்டதே’ என்று அவலக்குரல் எழுப்புவதோ அல்லது ஆத்திரத்துடன் உறுமுவதோ என்ன பயனைத்தான் தந்து விட முடியும்?

தனது குஞ்சுகளைக் கொத்திச் செல்ல முயலும் பருந்திடமிருந்து அவற்றைப் பாதுகாக்கப் போராடும் தாய்க்கோழி; போலத்தான் வல்லரசுப் பருந்துகளையும் வல்லூறுகளையும் எதிர்த்துப் போராடும் சிறிய தேசங்களின் நிலையும் இருக்கும்.

இப் போராட்டத்தில் குஞ்சுகளைப் பாதுகாப்பதுதான் தாய்க்கோழியின் முதற்குறி. பருந்துக்கு ஏற்படுத்தும் சேதம் அல்ல. பல வேளைகளில் ஒரிரு குஞ்சுகளைப் பறிகொடுத்த போதும் ஏனைய குஞ்சுகளைத் தாய்க்கோழி எவ்வாறாயினும் பாதுகாத்து விடும். ஆர்ப்பரித்தெழுந்து போராடி, தனது இறக்கைகளால் குஞ்சுகளைப் பாதுகாத்து, பெரும் குரல் எழுப்பி மனிதர்களைத் துணைக்கழைத்து, பருந்தினைத் துரத்தி விடத் தாய்க்கோழி போராடும் விதம் இருக்கிறதே – இது சிறிய தேசங்களுக்கு தாய்க்கோழி கற்றுத் தரும் ஒரு இராணுவ, அரசியல், இராஜதந்திரப் பாடம்.

பருந்தும் தாய்க்கோழியும் கை கோர்த்ததை நிஜவாழ்வில் நாம் பார்த்ததில்லை. ஆனால் சர்வதேச அரசியலில் பருந்தும் தாய்க்கோழியும் கை கோர்ப்பதும் நடக்கும்.

தமிழீழத் தேசத்தின் சர்வதேசப் பரிமாணம் ஒரு வகையில் தாய்க்கோழியின் நிலைதான்.

தமது நலன்களுக்காக எமது நலன்களைப் பறித்துக் கொள்ள முயன்ற அனைத்துலகச் சக்திகளுடன்தான் தனது நலன்களுக்காக தமிழீழ தேசம் மோத வேண்டியிருந்தது. அதே சமயம் உறவும் வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது.

முள்ளிவாய்க்காலில் எமக்கு விழுந்த அடி, சிங்கம் அடித்த அடி மட்டுமல்ல. உலகப்பூதம் அடித்த அடியும் கூட.

சிங்கள இனவாத ஆட்சியாளர்களால் உலகை எவ்வாறு தன்வசப்படுத்த முடிந்தது? நாம் ஏன் தனித்து விடப்பட்டோம்?

உலகமெங்கும் வாழும் 80 மில்லியன் தமிழர்களை விட, 18 மில்லியன் சிங்களவர்கள் ஏன் உலகுக்கு முக்கியமாய்ப் போனார்கள்?

ஏன் எம்மால் நாம் கட்டி வளர்த்த நடைமுறை அரசைப் பாதுகாக்க முடியாமல் போனது? எமது விடுதலை இயக்கம் ஏன் முள்ளிவாய்க்காலில் மூச்சிழந்து போனது?

இதற்கெல்லாம் விரிந்த பரிமாணத்தில் உலகப்பந்தைப் புரட்டியும்தான் பதில் தேட வேண்டியுள்ளது. இதற்கு உலகப்பந்தில் தமிழீழத்தைப் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.

1987 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி பிற்பகல்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தளபதி கிட்டு, யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளர் திலீபன் உள்ளடங்கலான விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமைக் குழுவினர் இந்திய இராணுவ விமானத்தில் பலாலி விமானத்தளத்தை வந்தடைகிறார்கள்.

இவ்வாறு வந்தடையும் இவர்களை களத்தில் விடுதலைப்புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையாவின் பொறுப்பில் இயங்கிக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்பதுதான் ஏற்பாடு.

இந்த நிகழ்வு சுதுமலையில்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் நடுப்பகுதியில் சுதுமலையில் வைத்துத்தான், இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியின் அழைப்பின் பேரில் இவர்களை இந்தியாவின் வானூர்தி ஏற்றிச் சென்றது.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடுகளால், பிரபாகரன் புதுடில்லியில் அசோகா விடுதியில் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற ஒரு தகவலும் பரவியிருந்தது.

இச் சமயம், ஒப்பந்தம் கையெழுத்தாகி இந்திய இராணுவம் அமைதிகாக்கும் படையாக வந்திறங்கத் தொடங்கியிருந்தது.

தலைவர் திரும்பி வரும்வரை இந்திய இராணுவத்துடன் ஒத்துழைக்க மாத்தையா மறுத்து விட்டார்.

‘எங்கு வைத்து ஏற்றிச் சென்றீர்களோ அந்த இடத்தில் வைத்தே தலைவரை எம்மிடம் ஒப்படையுங்கள். அதன் பிறகு பேசுவோம்’ எனத் தீர்க்கமாகக் கூறிவிட்டார்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் பிரதித் தலைவர் எனும் பொறுப்பு முன்னர் இருக்கவில்லை. இந்தியாவின் அழைப்பின் பேரில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களுக்குப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டு, தமிழீழ மண்ணை விட்டுப் புறப்படும் போதே பிரபாகரன் மாத்தையாவை பிரதித்தலைவராக நியமிக்கிறார்.

சில வேளைகளில் திரும்பிவர முடியாமல் போகலாம் என அவரது உள்ளுணர்வு கூறிக் கொண்டதே இதற்குக் காரணமாக இருக்கலாம். இந்தியாவின் அழுத்தங்களில் இருந்து தப்ப வேண்டும் என்பதற்காகவே 1987 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இரகசியமாகப் படகு மூலம் தமிழ்நாட்டிலிருந்து பிரபாகரன் தமிழீழம் வந்திருந்தார். ஆனால் இந்தியா இவரை விடவில்லை.

தனது யுத்த விமானங்கள் மூலம் உணவு வீசும் ‘ஒப்பிறேசன் பூமாலை’ எனும் மென் இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டு, சிறிலங்கா ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவைப் பணிய வைத்து, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை இந்தியா தீர்மானித்தது. ஈழத் தமிழரின் முதன்மை விடுதலை இயக்கமாக இருந்த விடுதலைப் புலிகளுக்கு அதனைத் தெரிவித்து இவ்வொப்பந்தத்தை பின்பற்றுமாறு அறிவுறுத்த முனைந்தது. இதற்காகப் பிரபாகரன் ராஜீவ் காந்திக்குத் தேவைப்பட்டார்.

இந்தியாவின் அழைப்பை ஏற்றுச் சென்றால் தன்மீது மிகப் பெரிய அழுத்தம் வரும் என்பதும், போகாவிட்டால் அதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்பதும் பிரபாகரனுக்கு நன்கு தெரியும். விடுதலைப்புலிகள் இந்தியாவை நிராகரிப்பதை என்ன காரணத்துக்காகவும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் தமிழ் மக்கள் அப்போது இருக்கவில்லை. களநிலையும் சாதகமாக அமையவில்லை.

‘ஒப்பிறேசன் லிபரேசன்’ எனும் பெயரில் வடமராட்சி ஆக்கிரமிப்பினை சிறிலங்காப்படைகள் மேற்கொண்டிருந்தன. நெல்லியடி இராணுவ முகாம் மீதான மில்லரின் தற்கொலைத் தாக்குதலுடன் கூடிய எதிர்த்தாக்குதல்களை விடுதலைப்புலிகள் நடத்தியிருந்தாலும்கூட சிறிலங்காவின் இராணுவபலம் மேலோங்கியிருந்த நிலை. இச் சூழலில், இந்தியாவின் கோபத்திற்கு ஆளாவதனைத் தவிர்க்க, இந்தியாவின் அழைப்பை ஏற்பதென்ற முடிவைப் பிரபாகரன் எடுக்கிறார். மாத்தையாவினைப் பிரதித் தலைவராக அறிவிக்கிறார்.

இந்தியாவில் நடந்த பேரங்களும் மாத்தையாவின் இறுக்கமான நிலைப்பாடும் இணைந்து தொழிற்பட பிரபாகரனை மீண்டும் தமிழீழத்திற்கு அனுப்பி வைக்கும் முடிவை இந்தியா எடுக்கிறது. இப் பின்னணியிலேயே இவர்கள் இந்திய இராணுவ விமானத்தில் பலாலிப் படைத்தளத்திற்கு வந்திறங்குகின்றனர்.

சுதுமலையில் பிரபாகரன்

பலாலித் தளத்திலிருந்து பிரபாகரன் சுதுமலைக்கு வந்து சேரும் பாதையின் இரு மருங்கும் விடுதலைப் புலிப் போராளிகள் அணிவகுத்து நிறுத்தப்படுகின்றனர். இப் பாதைப் பகுதியில் ஊரடங்கு உத்தரவும் விடுதலைப் புலிகளால் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அனுதிப்பத்திரமின்றி போராளிகள் உட்பட எவரும் நடமாட முடியாது. பொட்டம்மான் கூட அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தால் தடுத்து நிறுத்தப்படுகிறார். இப்படி ஏற்பாடுகள் இறுக்கமாக இருந்தன.

பிரபாகரனின் பாதுகாப்புக்காகவே இந்த எற்பாடுகள் என்று கூறப்பட்டாலும் விடுதலைப் புலிகளின் முன்னெச்சரிக்கையை, போராளிகள் பலத்தை இந்திய இராணுவத்திற்கு உணர்த்த வேண்டும் என்பதும் புலிகளின் நோக்கமாக இருந்தது. பாதுகாப்புக் கவச வாகனங்களுக்குள் பிரபாகரனையும் ஏனையோரையும் உள்ளிருத்திக் கொண்டுவந்து சுதுமலையில் வைத்து புலிகளிடம் ஒப்படைத்தது இந்திய இராணுவம்.

தளம் திரும்பிய பிரபாகரன் அன்று மாலை முக்கியமான பொறுப்பாளர்களையும் போராளிகளையும் சந்திக்கிறார். இந்தியப் பிரதமருடன் நடைபெற்ற பேச்சுக்களையும் அங்கு நடைபெற்ற விடயங்களையும் சுருக்கமாக எடுத்துக்கூறுகிறார்.

‘எனக்கு முன்னால் இருக்கும் தெரிவு வளைவதா அல்லது முறிவதா என்பதே. நான் வளைவது என்ற முடிவை எடுத்துள்ளேன்’.

என இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் இணைந்து போக தான் எடுத்திருந்த முடிவைக் கூறுகிறார்.

பல போராளிகளால் இம்முடிவினை ஜீரணிக்க முடியவில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தம்தான் தற்போது பேசப்படும் 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படை. இது தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை எந்த வகையிலும் எட்ட முடியாத வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருந்தது. இன்னும் முக்கியமாக இவ்வொப்பந்தத்தின்படி விடுதலைப் புலிகள் இயக்கம் தனது ஆயுதங்களைக் கையளித்து, சிறிலங்கா வழங்கும் பொதுமன்னிப்பை ஏற்று அரசியல் பாதைக்குத் திரும்ப வேண்டியிருந்தது.

இவை எல்லாவற்றிற்கும் பிரபாகரன் ஒப்புக் கொண்டார்.

சுதுமலையில் நடைபெற்ற கூட்டத்தில் ’இந்த ஒப்பந்தத்தை இனவாதப் பூதம் விழுங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. தமிழ் மக்களின் பாதுகாப்பை இந்தியாவிடம் ஒப்படைத்து எமது ஆயுதங்களைக் கையளிக்கிறோம்’ என 1987 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ம் நாள் பிரகடனப்படுத்தியபோது கூடியிருந்த மக்கள் கைதட்டி வரவேற்றார்கள்.

ஓகஸ்ட் 5ம் திகதி ஆயுதங்களும் பலாலித் தளத்தில் வைத்து கையளிக்கப்படுகின்றன. ஜே. ஆரின் பொதுமன்னிப்புப் பட்டயத்தை யோகி பெற்றுக் கொள்கிறார்.

இம்முடிவை ஜீரணிக்க முடியாத மூத்த போராளி ஒருவர் பிரபாகரனிடம் செல்கிறார். மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக இந்த முடிவோடு தன்னால் ஒத்துப் போக முடியவில்லை எனக் கூறுகிறார். அரசியல்ரீதியாகவும் உணர்வுரீதியாகவும் பல்வேறு காரணங்களை எடுத்துச் சொல்கிறார்.

பிரபாகரன் பொறுமையாக அதனைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு ‘அப்ப என்ன செய்யலாம்? நீ சொல்லு’ என உரிமையுடன் சொல்கிறார்.

‘எனக்கு வழி தெரியேலை. ஆனால் இந்த ஒப்பந்தத்தோடை சேந்து போக என்ரை மனம் இடம் தரேலை’ என அந்த மூத்த போராளி சொல்ல பிரபாகரன் சொல்கிறார்.

‘நீ இதை என்னிட்டை சொல்லலாம். நான் உதை மக்களிட்டை சொல்லேலாது. நான் ஒரு முடிவை எடுக்க வேணும்’.

இந்திய-இலங்கை ஒப்பந்தக் காலம், தமிழீழவிடுதலைப் போராட்டம் புவிசார் பிராந்திய அரசியல் அழுத்தங்களை உச்சமாகச் சந்தித்த காலகட்டம்.

இவ் அங்கத்தின் நோக்கம் இக்காலகட்ட நிகழ்வுகளை விபரிப்பதல்ல.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அனைத்துலகப் பரிமாணங்களை, இப் பரிமாணங்கள் இப் போராட்டத்திற்கு வழங்கிய சவால்களை, முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகள் இயக்கம் முறியடிக்கப்படுவதற்கு இப் பரிமாணங்கள் வழங்கிய பங்களிப்பை, இப் பரிமாணங்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கி விடாமல் பாதுகாப்பதில் நாம் அடைந்த தோல்வியை பற்றி ஆராய்வதே இவ் அங்கத்தின் நோக்கம்.

பிரபாகரன் எவ்வித விட்டுக் கொடுப்புக்களுமின்றி இலக்கில் உறுதியாக இருந்தமையால் அனைத்துலமும் சேர்ந்து அழித்து விட்டது எனக் கூறுவது மிக எளிமைப்படுத்தப்பட்ட விளக்கமாக இருக்கிறது.

இந்திய இலங்கை ஒப்பந்தம் திணிக்கப்பட்டபோது பல போராளிகளின் அதிர்ப்தியையும் மீறி பிரபாகரனால் வளைந்து போக முடிந்திருக்கிறது. பின்னர் கடந்து போகவும் முடிந்திருக்கிறது.

ஒரு போராட்டத் தலைவன், போராட்ட இயக்கம் வளைந்து போவதற்கும் பின்னர் கடந்து போவதற்கும் அதற்குரிய அகப்புறச் சூழலும், வெளியும் (space) இருக்க வேண்டும். அல்லது உருவாக்கப்பட வேண்டும்.

இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் வளைந்து போக முடிந்த பிரபாகரனால் பின்னர் முடியாமல் போனது ஏன்?

தமிழீழ விடுதலைப்போராட்ட காலத்தில் உலக ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றங்கள் போராட்டத்தின் போக்கை, அதன் வெற்றியின் சாத்தியப்பாட்டை எவ்வாறு பாதித்தன?

இவ்வுலக ஒழுங்கில் எமது போராட்டத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியாமல் எம்மைத் தடுத்தவை எவை?

இவை எல்லாம் குறித்து நாம் ஆராய வேண்டியுள்ளது.

Thursday, March 4, 2010

போராட்டம் & வீரர்கள்


இடி இடித்தால் தான்
வெளிச்சம் மின்னலாக
வெளி வரும்
வானம் சிவந்தால் தான்
பூமிக்கு விடியல் கிடைக்கும்
வலி எடுத்தால் தான்
குழந்தை பூமியில் தவழும்
புரட்சி நடந்தால் தான்
பூமியில் சுதந்திரம் கிடைக்கும்......

உயிர் இழந்த சுதந்திர போராட்ட வீரர்கள்
காய்ந்து விழும் சருகல்ல
நிலத்தில் விழும் விதைகள்
வீணே வான் சிந்தும் நீர் அல்ல
பல பயிர்கள்
மண்ணை துளைத்துக் கொண்டு
வெளியே வரக் காரணமான
மழை நீர்

சில தமிழனின் மாற்றம்

வெளிநாட்டில்
தமிழனுக்கு
தமிழில்
பேச வெட்கம்

நாகரீகம்
முத்திப் போய்
நடை உடையிலை
மாற்றம்

பிள்ளைகளின்
பெயரைக் கேட்டால்
தமிழனோ
எனத் தடுமாற்றம்

தமிழ் இனத்தின்
தலை எழுத்தில்
இப்படி ஏன்
மாற்றம்

இன்னும் இரண்டு
தலை முறையில்
இவனின் நிலை
இங்கு சோகம்

அரசாங்க
இலவசப் பணத்தில்
ஆடம்பர
ஆட்டம்

அதை எடுத்து
சிலதுகள்
இங்கு சூது
ஆட்டம்

அகதியாகி
வந்தும் இங்கே
சண்டியர்
கூட்டம்


ஏனடா தமிழா
உனக்கு
இப்பவே
இந்த மாற்றம்

வீழ்ந்த தோழர்களை புதைப்போம். மீண்டும் போருக்கு செல்வோம்.

மீண்டும் போருக்கு செல்வோம் -கண்மணி.

சீனத்தின் வரலாற்றை புரட்டிப்போட்ட மார்க்சிய ஆசான் தோழர் மாவோ வெறும் போராளி அல்ல. ஒரு தலைச்சிறந்த கவிஞர், இலக்கியவாதி. எப்பொழுதும் கலகலப்பாக மக்களை வைத்திருப்பதில் மகா திறமை வாய்ந்தவர். நமது தேசியத் தலைவரும் சற்றேறக்குறைய அதேபோன்றே குணம் வாய்ந்தவராக இருந்தார். பேசும் போதெல்லாம் சிரிக்க சிரிக்க பேசும் ஒரு ஆற்றல் அந்த மாபெரும் போராளியின் மனதில் சம்மனம் இட்டு அமர்ந்திருந்தது. எதை எதிர்கொள்ளும்போதும் துணிவோடும், திட்டமிட்டும், தளராமலும் செய்யும் தேசிய தலைவர் ஒரு குழந்தைத் தனமான மனம் கொண்டவராக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவருக்குள்ளும் இலக்கியம் கரைபுரண்டு ஓடியது. அவர் உலகிலுள்ள புத்தகங்களை எல்லாம் தேடி எடுத்து படித்தார். அந்த தேடல்தான் அவரை இந்த உலக மக்களை எல்லாம் தேட வைத்தது. நாம் தோழர் மாவோ பற்றி சொல்லிக் கொண்டிருந்தோம் அல்லவா? தோழர் மாவோ, கதைகள், கவிதைகள், நாடகங்கள் மூலம் சீன விவசாய கம்யூனிஸ்ட் தோழர்களை தம்முடைய சொல்லாற்றலால் ஒருங்கிணைத்து தட்டி எழுப்பினார். ஒருமுறை தோழர் மாவோ தமது விவசாய தோழர்களிடம் ஒரு கதை கூறினார்.

''சீனாவில் ஒரு கிராமத்தின் அருகே ஒரு பெரிய மலை இருந்தது. அந்த மலைக்குப் பின்னால் அழகிய, ஆராவாரத்தோடு ஓடும் ஒரு நதி மிகச் சிறப்பாக, ரம்மியமாக ஓடிக் கொண்டிருந்தது. அந்த நதி நீரின் தேவை கிராமத்திற்கு மிக மிக அவசியமானதாக இருந்தபோதும், அந்த நதியை கிராமத்திற்குள் விடாமல் மலை தடுத்து நின்றது. ஒரு முதியவர் எப்படியாகிலும் அந்த மலையை தகர்த்து நதிநீரை கிராமத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்று செயல்படத் தொடங்கினார்.

தமது கிராமத்திற்கு தடையாக இருக்கும் அந்த மலையை தகர்த்தெறிய, தாம் முயற்சி செய்ய துவங்கினார். தம் கிராமத்தின் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும் அந்த மலையை உளியால் தினம்தினம் உடைக்க தொடங்கினார். காலையில் செல்லும் அந்த முதியவர் இரவு வரை தமது பணியை இடைவிடாமல் தொடர்ந்தார். இதை போகும், வரும் வழிப்போக்கர்கள் நின்று நிதானித்து அவரைப் பார்த்து கேலிப் பேசிவிட்டு செல்வது நாள்தோறும் நடக்கும் நிகழ்ச்சியாக இருந்தது. சிலர் அந்த முதியவரிடம், கிழவா! நீ என்ன செய்கிறாய்? என்று நக்கலாக கேட்பதும், அதற்கு அந்த கிழவர் அமைதியாக இருப்பதும் சில நேரங்களில் பதிலளிப்பதுமாக இருந்தார். ஒவ்வொருமுறையும் அவர் சொல்வார், ''நான் இந்த மலையை உடைத்து நதியை என் கிராமத்திற்கு கொண்டுவரப் போகிறேன்" என்று.

இது அவரிடம் கேள்வி கேட்கும் பார்வையாளர்களுக்கு பரிகாசமாய் தோன்றியது. அவர்கள் அந்த முதியவரின் வார்த்தையைக் கேட்டு எள்ளி நகையாடினார்கள். கிழவா! மலை எவ்வளவு பெரியது. இதை உடைக்கும்வரை நீ உயிரோடு இருப்பாயா? என்று அந்த முதியவரைப் பார்த்து அவர்கள் பெரும் அறிவாளிகள் போல் கேள்வியினை தொடுத்தார்கள். அதற்கு அந்த முதியவர் சொன்னார், ''நான் உயிரோடு இருக்கும்வரை இந்த மலையை உடைப்பேன், எனக்குப் பிறகு என் மகன் உடைப்பான். அவனுக்குப் பின் என் பேரனும், கொள்ளுப்பேரனும் தொடர்வார்கள். இன்றில்லாவிட்டாலும் என்றேனும் ஒருநாள் நாங்கள் வென்றேத் தீருவோம். ஒருநாள் இந்த மலை உடைத்தெறியப்படும்" என்று நெஞ்சுயர்த்தி, கம்பீரமாய் பதிலுரைத்தார்.

இதை வானத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவதைகள், மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தார்கள். முதியவரின் நம்பிக்கையையும், மனஉறுதியையும் உள்ளார்ந்து நேசித்து அந்த மலையை தேவதைகள் அப்படியே தூக்கி வேறு இடத்தில் நிறுத்தினார்கள். நதி ஆராவாரத்தோடு அந்த கிராமத்திற்குள் புதுப்புனலாய் பாயத் தொடங்கியது".

கதையை இங்கு நிறுத்திய மாவோ இந்த கிராமிய கதையில் வரும் கிழவன் செய்யும் வேலையைத் தான் நாம் செய்கிறோம் என்று பதிலுரைத்தார். நெடிய மலைகள் பொடியாகும். இருமார்ந்த சிகரங்கள் தகரும். புதுவெள்ளம் பாய்ந்து வரும். இந்த மகத்தான உண்மையை மிக எளிய கதையால் புரிய வைத்த மாவோ நம்மிடம் சொல்கிறார், நமக்கான நாடு அமையப்போகிறது. அந்த பணியை தேசிய தலைவர் துவக்கி வைத்தார். அது அவருடைய தலைமையிலேயே நிகழும். அந்த தேவதைகளைப் போல காலம் தமிழீழத்தை மீட்டு, தமிழர் வாழ்விலே புதுப்புனலாய், பொன்னருவியாய், தேன்தென்றலாய், தெம்மாங்குப்பாடலாய், நம் உள்ளங்களை தாலாட்டப் போகிறது. அந்த காலம் மிக மிக அருகில் தான் இருக்கிறது. ஆனால் இந்த நிலையை எட்ட நாம் நமது கடந்தகால நிகழ்வுகளை பின்னோட்டமாய் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

கடந்த ஆண்டு இந்த நேரமெல்லாம் நம்முடைய துயரின் எல்லை கடந்திருந்தது. எமது மக்கள் உடல் சிதறி ஆங்காங்கே இரைந்து கிடந்தார்கள். இது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆதாரப்பூர்வமாக செய்தியாக வந்திருக்கிறது. ஐ.நா.வில் முன்னாள் செய்தித் தொடர்பாளர் அதிர்ச்சி நிறைந்த இத்தகவலை அள்ளித் தெளித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் ஏபிசி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணலில், ''சிங்கள பேரினவாத அரசு, உலக நாடுகளை தமது சதி நிறைந்த திட்டத்தால் தவறாக வழிநடத்தியது. உலக நாடுகளிடம் சிங்கள பாசிச அரசு பெரும் பொய்களை கட்டவிழ்த்துள்ளதாக கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறார்". 14 வருடங்களாக ஐ.நா. சபையில் பணியாற்றிய கோர்டன் வைஸ் தமது பதவியை விட்டு விலகியப் பின் அளித்த நேர்க்காணலில், நமது நெஞ்சங்களை பதறச் செய்யும் செய்திகளால் நிரப்பியிருக்கிறார். இறுதிக்கட்ட சமர் என்று சிங்கள பாசிச அரசு அறிவித்து நடத்திய இன அழித்தொழிப்பில் பெருந்தொகையான தமிழர்கள் கொல்லப்பட்டதை அவர் உறுதி செய்திருக்கிறார்.

சிங்கள பேரினவாத அரசும், பார்ப்பனிய இந்திய அரசும் உலக பேராதிக்க அரசுகளும் ஒன்றிணைந்து அழித்தொழித்த தமிழின மக்களின் தொகை 10,000 தொடங்கி 40,000 வரை இருக்கும் என அவர் கூறும் செய்தி நம்மை நெஞ்சை உறையச் செய்கிறது.

''இந்தப்போரின் கடைசி நேரத்தில் சற்றேறக்குறைய 3 லட்சம் பொதுமக்களும், போராளிகளும் நியூயார்க் நகரில் உள்ள சென்ட்ரல் பார்க் அளவே உள்ள சிறிய பகுதிக்குள் முடக்கப்பட்டனர் என தெரிவித்த அவர், போரின் போது புலிகளை அடிப்பதற்காக சிறிய மற்றும் பலம் வாய்ந்த கருவிகள் தாக்கும் எல்லைக்குள்ளேயே அவர்கள் முடக்கப்பட்டார்கள் என்றும் இந்தநேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உடல் சிதறி இறந்தார்கள்" எனவும் அவர் கூறுகிறார்.

இந்த தகவல் எந்த நிலையிலும் போராளிகளிடமோ, அல்லது பொதுமக்களிடம் இருந்தோ நாம் பெறவில்லை என்றும், இது போர் நடந்தபோது அங்கே இருந்த பார்வையாளர்கள் கொடுத்த தகவல்கள் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். சிங்கள பேரினவாத ராஜபக்சே அரசு அனைத்துலக நாடுகளை தமது தவறான வழிக்காட்டுதலால் நடத்திச் சென்றது. இதன் காரணமாகவே இப்படிப்பட்ட ஒரு பேரழிவை அம்மக்கள் சந்தித்தார்கள். ஆனால் திட்டமிட்டே இறந்த மக்களின் தொகையை மிகக் குறைத்து சிங்கள இனவாத அரசு கூறுகிறது என்று அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது நமக்கு அதிர்ச்சிக்குரிய தகவல் மட்டுமல்ல, நம்மை எழுச்சிக் கொள்ள வைக்கும் தகவலும் கூட. நம்மை முடக்கிப்போடும் தகவல் அல்ல. நம்மை முன்னேறத் தூண்டும் தகவலாக இது இருக்கிறது. காரணம் நாம் மாவோ கதையில் கேட்டதைப் போல உளி கொண்டு தொடர்ந்து செதுக்கிக் கொண்டுதான் இருக்கப் போகிறோம். இது, நமக்கான நாடு அமையும்வரை மாறப்போவது கிடையாது.

எம்மின மக்களுக்கு எமது எண்ணங்களையும், எழுச்சி நிறைந்த வார்த்தைகளையும் தொடர்ந்து தருவதிலே நாம் களத்திலிருக்கப்போகிறோம். எந்த நிலையிலும் விழமாட்டோம் என்கின்ற உயரிய லட்சியம் அவர்களுக்குள் எழுச்சியோடு வளர வேண்டும். இன்று புலம் பெயர்ந்த நாடுகளிலிருக்கும் எம்மின உறவுகளுக்கெல்லாம் லியூயாசி என்கின்ற சீனத்துக் கவிஞர் எழுதிய இந்த கவிதை வரிகளை மீண்டும் நினைவுப்படுத்துகின்றோம்.

என் இதயம் உண்மையில் நிரம்பிவழிகிறது.
கடந்த காலத்திற்காக வருந்தமாட்டேன்.
ஓ! தெற்கிலிருந்தும் வெற்றி செய்தி வருகிறது.
என் ஊரும், பழக்கமான ஏரியும் தான்
என் உறைவிடம், ஒரு தவப்பீடம்.
என்னை நீங்கள் இருகரம் நீட்டி வரவேற்றாலும்
நெடுநாள் அங்கே தங்கமாட்டேன்.
வீணாகி விட்டன என் வாழ்நாட்கள்
மெத்த வருந்துகிறேன் அதற்காக.


ஆம்! எம் இனிய உறவுகளே! நாம் நமது சொந்த மண்ணில் தலைசாய்த்து, அந்த காற்று பாடும் தாலாட்டை கேட்டு கண்ணுறங்கும் நாள்தான் நம்முடைய வாழ்நாளின் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும். எப்போதும் தோற்றுப்போக நாம் பிறக்கவில்லை. வெற்றிப் பெறவே பிறந்திருக்கிறோம். அதற்காக நம்மை நாம் அர்ப்பணிக்கப்போகிறோம். ஆற்றலோடு களம் அமைக்கப் போகிறோம். எதற்கும் அஞ்சாமல் சமர் செய்யப் போகிறோம். ஏனெனில் நமக்கான ஒரு இலட்சியம் உண்டு.

நாம் எல்லோருக்குமான ஒரு கனவு உண்டு. அது தமிழீழம். நம் சொந்த நாடு. நம் தாய்நாடு. தாய் மடியிலே உண்டு, உறங்கி எழுவதிலிருக்கும் உண்மை மகிழ்ச்சி எந்நிலையிலும் அந்நிய மடியில் நமக்கு கிடைக்கப் போவதில்லை. அதற்காக எந்நிலையிலும் நம்மை நாம் தயாராய் வைத்துக் கொள்வோம். அதற்காக நம்மை நாம் தயாரிப்போம். நமக்கான ஒரு நாடு அமையும்போது என்ன செய்ய வேண்டும் என்று நாம் திட்டமிடுவோம். காரணம் நமது பயணம் இதோ விரைவில் முடிய இருக்கிறது. அந்த முடிவு நம்மை முடிவில்லா மகிழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப் போகிறது. அதற்கு நம்மை தயார் படுத்திக் கொள்வோம். தோழர் மாவோ சொல்லியதைப் போல,

நாம் மீண்டும் எழுவோம்.
ரத்தத்தை துடைத்துக் கொள்வோம்.
வீழ்ந்த தோழர்களை புதைப்போம்.
மீண்டும் போருக்கு செல்வோம்.