
சுதந்திர இந்தியா
அடிமைத் தளை
நம்மை ஒன்றாக கட்டி வைத்தது
சுதந்திரம் நம்மை
கட்டவிழ்த்து வேறுவேறாக பிரித்துவிட்டது
அன்று வெள்ளையனை வெளியேற்ற
நாம் ஒன்றினைந்திருந்தோம்
இன்று நாமே தனித்தனி
தீவுகள் ஆகிவிட்டோம்
வெள்ளையனை வெளியேற்ற
போராடிய நாமே இன்று
வெள்ளைக்காரர்கள் ஆகிவிட்டோம்
அடிமை என்ற தளையை
அகற்றிய நாமே
ஜாதி மதம் என்ற
விலங்கினை நமக்கு நாமே
பூட்டிக் கொண்டோம்
கிளிந்து கிடந்த இந்தியாவை
ஒன்றாக தைத்தவன்
வெள்ளைக்காரன்
அதை சுதந்திரம் என்ற
கத்தரிக்கோலால் மறுபடியும்
துண்டுகளாக்கியவன்
இந்தியன்
No comments:
Post a Comment