
இலக்கியம் "களத்தில் நிற்கிறேன் என் இலக்கியத்தில் அழகில்லை என்கிறாய்! தோரணம் கட்டும் தொழிலோ எனக்கு? வாளில்- அழகு தேடாதே.. கூர்மை பார்: புத்துயிர் "போராளிகள் செத்து கொண்டிருக்கும் மண் என்கிறார்கள். என் மண்ணை. திருத்தினேன்- போராளிகள் பிறந்து கொண்டிருக்கும் மண் உடைப்பு "சொல்கிறார்கள் கிளியின் கூண்டை திறந்து விடு: முரண் படுகிறேன். உடைத்து விடு: உலக அமைதி மனித நேயம் பேசின அணுகுண்டுகள் புறாக்களை பறக்க விட்டன கழுகுகள் போராடிக் கொண்டிருக்கிறது அமைதி" அரண் என் வலக்கையின் ஐந்து விரல்கள் உண்ணவும் எழுதவும் வணங்கவும் மட்டுமல்ல அறையவும்... நாற்காலி இங்கே வேறுபாடு அதிகம் இல்லை. நாற்காலிக்கும் கட்டிலுக்கும் வீடு தூங்க கட்டில். நாடு தூங்க நாற்காலி... | ||
| ||
No comments:
Post a Comment